தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்த 7 பேரின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது, நேற்று சண்முகம், செல்வசேகர் ஆகியோர் உடல்கள் மறுபடியும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து வந்த டாக்டர் அம்பிகா நடத்தி வருகிறார். இன்று தொடர்ந்து மீதமுள்ள 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படும்.
பிரேத பரிசோதனை முடிந்தவர்களின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் உறவினர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவை அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்கள் தொடர்ந்து ஒரு வாரம் பதப்படுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.