ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இன்று சட்டமன்றத்தில் பேசினர்.
அதற்கு பதில் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான தேவையில்லை எனவும், இந்த அரசு சட்ட நிபுணர்களுடன் பேசி தடையை தொடர்வதற்கான வழிவகை செய்யும் எனவும் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் முக.ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்த போது தான் 230 ஏக்கர் நிலம் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டதை ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசிய குறிப்புகளை சுட்டிக்காட்டி பேசினார்.
இதனிடையே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– சங்கர் (தலைமை செயலக செய்தியாளர்)