சிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம்

Forums Inmathi News சிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம்

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • Author
    Posts
  • #3173

    சிவகங்கையை அடுத்த கச்சநத்தம் கிராமத்தில் இரு ஜாதியினரிடையே நடந்த மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்றுவருபவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததையொட்டி பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே,  ஜாண் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் அவர்கள் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும், இயக்குனர் பா.ரஞ்சித் இச்சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

     

    Attachments:
    #3188

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி, கச்சநத்தம் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வன்முறையில் இரண்டு பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆறு பேர் தீவிர படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்னும் 36 வயது நபர் இன்று உயிரிழந்தார். சாதி வன்முறையாக மட்டுமல்லாமல் கஞ்சா விற்பனை , கந்துவட்டி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சாதி இந்துக்களின் வன்கொடுமையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை உடல்களை வாங்கப்போவதி ல்லை என கச்சநத்தம் மக்கள் முடிவு செய்துள்ளனர்

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This