சிவகங்கையை அடுத்த கச்சநத்தம் கிராமத்தில் இரு ஜாதியினரிடையே நடந்த மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்றுவருபவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததையொட்டி பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, ஜாண் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் அவர்கள் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், இயக்குனர் பா.ரஞ்சித் இச்சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.