Forums › Communities › Fishermen › தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த்
Tagged: sterlite
- This topic has 6 replies, 1 voice, and was last updated 2 years, 9 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
மே 30, 2018 at 1:23 மணி #3087
Attachments:
மே 30, 2018 at 2:40 மணி #3095ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட போவதன் முன்னோட்டமே தூத்துக்குடிக்கு சென்றது – திருமாவளவன்
நடிகர் என்ற முறையில் மக்களை சந்திக்க செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்- வைகைச்செல்வன் (அ இ அ திமுக)
மே 30, 2018 at 2:52 மணி #3105துத்துக்குடியில் ரஜினி செய்தியாளர்களிடம் கூறியது
மே 30, 2018 at 2:54 மணி #3107முகநூலிலிருந்து:
Madhu Rajendran
தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த ‘ முத்துக்கள் ‘…..தமிழகம் போராட்ட பூமியாகி விட்டது…..
போராட்டத்தை ஊக்குவிக்கிறார்கள் ….
போராட்டத்தில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள்….
எப்போதும் சொல்வேன், போலீஸ்காரர்கள் மீது கை வைப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்….
அவர்களைத் தாக்கினால், மக்களை யார்தான் காப்பாற்றுவார்கள் ( ! ) ……
எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் என்றால்,
எப்படி தொழில்சாலைகள் தமிழகத்தில் வரும் ?இனிமேல் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கும்போது, அரசு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்…..
பாதிக்கப்பட்ட பகுதிகளை, நிலைமை ஆறிய பின்பு செல்வேன்….
– தந்தி டிவி
@@ இவையாவுமே ‘ எங்கேயோ கேட்ட குரலா ‘ கவே இருக்கின்றதோ…. அவர்தான் ரஜினிகாந்த் !
மனித உரிமை மீறலாக பதிமூன்று அப்பாவி மக்கள் காவல்துறையினரால், சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டிக்கவே இல்லை…. அவர்தான் ரஜினிகாந்த் !
நீதிமன்றங்களில் தீர்வு கிடைக்காத போதுதான், மக்கள் போராட்டங்களுக்கு வருகிறார்கள் என்பதற்கு பதிலளிக்கவே இல்லை…… அவர்தான் ரஜினிகாந்த் !
மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தி, படுகொலை நடத்திய காவல்துறையை கண்டிக்காது,
காவலர்களைத் தாக்கியவர்களின் படங்களை வெளியிட்டு, கடுமையான தண்டனை வழக்க வலியுறுத்தி, அவர்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொண்டு,
இந்த நாசகார நச்சாலையின் வரலாறே அறியாது, எதற்கெடுத்தாலும் போராட்டமா என்று பொத்தாம்பொதுவாக மக்கள் மீதே குற்றம்சாட்டி,
போராட்டங்களின் நியாத்தன்மையை மறைத்து தமிழகம் போராட்ட பூமியாக மாறிவிட்டதென்றும், அவற்றை, மக்கள் மடையர்கள் போல, எவரோ தூண்டி விடுகின்றனர் என்று கூறி,
இப்படி இருந்தால், எப்படி தொழிற்சாலைகள் வரும் என்று தொழிலதிபர்களுக்கு தனது கரிசனத்தை காட்டி,
தூத்துக்குடி மக்களை ‘ மகிழ்ச்சி ‘ யில் ஆழ்த்தி விட்டு இறந்தவர்களுக்கு எதிர்கால முதல்வராக, தலா இரண்டு லடசமும், காயமுற்றவர்களுக்கு தலா பத்தாயிரமும் வாரி வழங்கி தனது வள்ளன்மையையும் காட்டி விட்டு வந்துள்ளார்….
சிஸ்டத்தை சரி செய்யும் ரஜினிகாந்த் !
மே 30, 2018 at 2:59 மணி #3110போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்துகிறார்; மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயகக் கட்சி
Attachments:
மே 31, 2018 at 6:58 காலை #3159தொல் திருமாவளவனின் பதிலடி
Attachments:
மே 31, 2018 at 7:21 காலை #3162முகநூலிலிருந்து:
Sam Ponraj
10 hrs ·
தூத்துக்குடியில் ரஜினி சந்தித்த 10 பேரில் ஒருவர் தவிர மற்ற அனைத்து பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அது தான் தமிழக வாக்காளர்களின் சினிமா மோக மனநிலை. முகநூல் மற்றும் டிவிட்டரில் ரஜினிக்கு எதிராக பேசுபவர்கள் 1% கூட இருக்க மாட்டார்கள். அவர்களில் பாதி பேர் வாக்களிக்காத வெளிநாட்டு மக்கள்.
திமுக அதிமுக வாக்கு வங்கியை ரஜினி பஞ்சர் ஆக்குவது நிச்சயம் என்றே தெரிகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை பலம் இனி வரவே கூடாது.
Attachments:
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.