ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது அரசு சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் அனுமதி ரத்து என்பது கண் துடைப்பு நாடகம் எனவும் , கடந்த 2013 இல் அப்போதைய அரசு இதே நடவடிக்கை எடுத்த போதும், நீதிமன்றம் சென்று ஸ்டெர்லைட் மீண்டும் இயங்கியது என்றும் குறிப்பிட்டார். ஆகவே ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கி சூட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்ட தொடர் முழுவதும் திமுக புறக்கணிக்கும் என்றும் கூறி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.