ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் தாமிர ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கவில்லை. தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேய் 25 அன்று ஆலைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து உத்தரவிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து மேய் 24 அன்று மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் 48 ஏ மற்றும் நீர் சட்டம் 1974 பிரிவு 18 (1)(b) ன் படியும், தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியம் ஆலையை பூட்டி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.