கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை பகுதியில் தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் மற்றும் மீத்தேன் திட்டத்தினை எதிர்த்து குறும்பனை சர்ச்சிலிருந்து ஊர்வலமாக 3000 மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.
இந்த போராட்டம் அருட்திரு. கஸ்பர் அருளப்பன் மற்றும் ஊர் தலைவர் ராஜப்பன் அவர்களின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு துவங்கியது. இப்போராட்டத்தில் 3000 மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினார் .
கடலில் இறங்கி போராடிய மக்கள், குறும்பனை பேருந்து நிலையத்தின் சாலையில் இரு பக்கத்திலும் நின்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும் அருட்திரு. கஸ்பர் அருளப்பன் அவர்களின் கண்டன உரை அடுத்து இப்போராட்டம் நிறைவடைந்தது.