துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு  நிதி உதவி ரூ.20 லட்சமாக

Forums Inmathi News  துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு  நிதி உதவி ரூ.20 லட்சமாக

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2874

  துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு  நிதி உதவி ரூ.20 லட்சமாக அதிகரிப்பு -முதல்வர்
  பெரும் பாதிப்பு

  தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழல், விவசாயமும் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் அந்த ஆலையை மூடவேண்டும் என்று தொடர்போராட்டங்களை அப்பகுதியினர் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்து வந்தனர்.

  100-வது நாள் முற்றுகை

  இந்நிலையில், கடந்த மூன்று மாதமாக நடந்து வந்த தொடர்போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டத்தின் 100-வது நாளை குறிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக போராட்டக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டனர்.

   

  13 பேர் மாண்டனர்

  அதன்படியே, கடந்த 22-ந் தேதி முற்றுகை போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றதும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று போலீசார் தடுத்து நிறுத்தியதால் கலவரமாக மூண்டதும், கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் மாண்டதும், பலர் காயமடைந்ததும் தெரிந்ததே. இந்த துப்பாக்கி சூட்டிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில் அப்பகுதியில் இயல்வாழ்க்கையும் முடங்கியது.

  சட்டப்பூர்வ நடவடிக்கை

  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும், அந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த உதவித்தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.

  முதல்வர் அறிவிப்பு

  இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துரதிருஷ்டவசமாக 13 நபர்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் துயரமும், மனவேதனையும் அளித்தது.

  கோரிக்கை

  22.5.2018 அன்று உயிரிழந்த நபர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டேன். தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கே சென்று உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோரை சந்தித்த போது, அவர்கள் நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

  அரசு பரிசீலித்தது

  அதன் அடிப்படையிலும், நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 25.5.2018 அன்று உத்தரவிட்டுள்ளதையும், பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

  நிதி அதிகரிப்பு

  இதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உயர்த்தி, 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும், துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை, ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தியும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This