தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, குமரி மீனவர்கள் இன்று பேரணி நடத்துகின்றனர். இந்த பேரணி இரு அணியாக நடைபெறுகிறது.
மிடாலத்தில் துவங்கும் ஒரு அணியானது, மேல்மிடாலம்,ஹெலன் நகர் வழியாக இனையம் புத்தன் துறையை அடையும். முள்ளூர் துறையில் துவங்கும் மற்றொரு பேரணி ராமன் துறை வழியாக இனையம் வந்து சேரும்.
இன்று மாலை 4 மணிக்கு பேரணி துவங்கும் என வழக்கறிஞர் ஸ்டேன்லி காஸ்மிக் சுந்தர் கூறுகிறார்.