அப்பலோவில் ஜெயலலிதா பேச்சு – ஆடியோ வெளியீடு
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் உள்ளிட்டோருடன் விசாரணை நடத்தி வருகின்றது.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். சர்க்கரை நோயாளிக்கு ஸ்வீட் இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது.
2016 நவம்பர் 22-ம் தேதி மதியம் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகிய இனிப்பு பலகாரங்களை உட்கொண்டதும் தெரியவந்தது.
வாழைப்பழம், மில்க் ஷேக் 2016 டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மில்க் ஷேக் வகைகளை ஜெயலலிதா உட்கொண்டார் என அறிக்கையில் தகவல் கூறப்பட்டு உள்ளது.
மேலும் சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் நேற்று ஆறுமுக விசாரணை ஆணையத்தின் முன் ஆஜர்ரானார். அப்போது ஜெயலலிதா சிகிச்சசை பெற்றவோது பேசியதாக ஒரு ஆடியோவை சமர்ப்பித்தார். இந்த செய்தி தமிழகத்தின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.