Forums › Communities › Fishermen › உண்மை கண்டறிய தூத்துக்குடி சென்ற வழக்கறிஞர் வாமனன் கூறுவது.
- This topic has 1 reply, 2 voices, and was last updated 2 years, 9 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
மே 25, 2018 at 10:29 மணி #2818
Nandha Kumaran
Participantகடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸாரால் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் வேல்முருகன் அமர்வு, இறந்தவர்களின் உடலை மறுபிரேத பரிசோதனைக்கு பாதுகாத்து வைக்கும்படியும், பொதுமக்களையும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உண்மை கண்டறியும் குழு ஒன்று தூத்துக்குடி சென்றது. அதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரியும் வழக்கறிஞர் வாமனும் சென்றிருந்தார். தூத்துக்குடி நிலவரம் குறித்து அவரிடம் இன்மதிக்காக பேசிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களாக நடந்த வன்முறைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி நிலவரம் எவ்வாறு உள்ளது ?மதுரையிலிருந்து காரில் தான் போனேன். பொதுப் போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை. ஆங்காங்கே போலீஸார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். மக்களிடம் உள்ள கோபமும் இன்னும் அகன்றதாக இல்லை. உடல்களை வாங்காவிட்டாலும் பரவாயில்லை. தீர்வு தேவை என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்.
காயம்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொல்கிறார்களே ? அவர்களின் நிலை இப்போது எவ்வாறு உள்ளது ?
நான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சென்று பார்த்தேன். 53 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் 50 பேர் வரை துப்பாக்கி சூட்டால் காயமடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இது போன்றே, ஏ.எஸ்.வி மருத்துவமனை மற்றும் அமெரிக்கன் மருத்துவமனை உள்ளிட்டவற்றிலும் காயமடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.அப்படியெனில் துப்பாக்கிச்சூடு மிகப்பெரிய அளவில் நடந்திருக்குமென கருதுகிறீர்களா ?
ஆம், இங்குள்ள சூழலை பார்க்கும் பொழுது போலீசார் எத்தனை ரவுண்டுகள் சுட்டிருப்பார்கள் எனவும் எத்தனை தோட்டாக்கள் அதற்காக பயன்படுத்திருப்பார்கள் எனவும், அவர்களிடம் கேட்டாலே தெரியுமா என்றால் சந்தேகம்தான்.காயம் பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் என்ன சொல்லுகிறார்கள் ?
அவர்களை அதிக தூரம் எதுவும் இல்லாமல் மிக அருகாமையிலிருந்தே தங்களை போலீஸார் சுட்டதாகக் கூறினார்கள்.வன்முறையைக் கட்டுப்படுத்தவே நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம் என போலீஸார் கூறுகின்றனரே ?
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பலரையும் சந்தித்து பேசினேன், அவர்கள் கலக்டர்அலுவலகம் போகும் வழியில் இருக்கும் பாலத்தை கடந்து கொண்டிருக்கும் பொழுதே கலக்டர்அலுவலகத்திலிருந்து புகை மண்டலம் மேலே எழும்பி வருவதை கவனித்ததாக கூறினர்.புகைமண்டலம் எழுந்ததாக கூறப்படும் கலக்டர் அலுவலகம் சென்றீர்களா ?அலுவலக வளாகத்தில் எரிந்துபோன நிலையில் வாகனங்கள்காணப்பட்டன , கலெக்டர் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. ஆனால் கலக்டர் அலுவலகத்தின் உள்ளே எந்தவித பாதிப்பும் இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் உள்ளதா என அங்கிருந்த காவல்ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டேன் . அதுவும் கல்வீச்சில் உடைக்கப்பட்டுவிட்டதாக என்னிடம் கூறினார்.
மக்களின் போராட்டத்தை வெளியிலிருந்து வந்த குழுக்கள் கையகப்படுத்திக் கொண்டதால் தான் வன்முறை ஏற்பட்டது என அரசுத்தரப்பில் கூறுகின்றனரே ?தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களில் ஒருங்கிணைக்கும் தலைமையில் சிறு பிரச்சனைகள்இருந்தாலும் கூட கடந்த மார்ச் 24 அன்று இதே போன்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மிகப்பெரிய போராட்டமொன்று நடந்தது , அப்போராட்டத்திலும் வெளியிலிருந்து வந்த குழுக்களானாலும் பிற அமைப்புகளானாலும் கலந்து கொண்டு செல்வாக்கை செலுத்தியிருந்தன . அதற்க்கு பின்பும் கூட தொடர்ச்சியாக அந்த அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. அப்போதெல்லாம் வன்முறைகள் ஏற்படாத நிலையில் இப்போராட்டத்தில் மட்டும் வன்முறை ஏற்படக் காரணம் என்ன என ஆராய்ந்தால் அரசும் காவல்துறையும் இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் நடந்து கொண்டது தெளிவாகும்.
மே 26, 2018 at 3:32 மணி #2842Thanthi TVVerified account @ThanthiTV
கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை – தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா பேட்டி * சட்ட விரோதமாக யாரையும் பிடித்து வைக்கவில்லை – முரளி ரம்பா.. #MuraliRambha
kanagaraj @cpmkanagaraj
பொய்சொல்லக்கூடாது எஸ்.பி. சார். ஏன் இரு தினங்கள் காவல் நிலையத்திலும் துப்பாக்கி சுடுதளத்திலும் வைத்திருந்தீர்கள். காயங்கள் மருத்துவ மனையால் பதிவு செய்யப்பட்டதை மறுக்கப் போகிறீர்களா?
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.