தூத்துக்குடியில், கலெக்டர்,எஸ்.பி மற்றும் காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வழங்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மருத்துவர் குழு அமைத்து கொல்லப்பட்டவர்களுக்கு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், பெருமாள், பூமயில் உள்ளிட்டோர் தூத்துக்குடியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த துவங்கினர்.
அப்போது, போலீஸார் வந்து அவர்களை கைது செய்து மண்டபத்தில் சிறை வைத்தனர். கைது செய்யப்பட்டாலும், தங்கள் உண்ணாவிரதம் தொடரும் என மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறுகிறார்.