தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடும், லேசாக காயம்டைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கி முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரிக்கும் எனவும் கூறியுள்ளார்.