ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசு அறிக்கை

Forums Communities Fishermen ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசு அறிக்கை

Tagged: 

Viewing 8 posts - 1 through 8 (of 8 total)
 • Author
  Posts
 • #2589
  Nandha Kumaran
  Participant

  ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

  வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்(இந்தியா) லிமிடெட்), தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி தொழிற்சாலை இயங்கி வருகின்றது.

  கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார்      வந்ததன்   அடிப்படையில்,     தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மாண்புமிகு அம்மா அவர்கள் 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள். இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்  முதன்மை அமர்வு மூடுதல் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து, மாண்புமிகு அம்மா அவர்கள் 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.

  இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் தாமிர உருக்காலை-ஐ-ன் 2018-2023 வருடத்திற்கான இசைவாணையை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது. இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது:

   

  1.       தொழிற்சாலை     மற்றும்      அதனைச்    சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

  2.       உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  3.       தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன் கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளது.

  4.       தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டை- ஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

  5.       ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

   

  மேற்கூறிய காரணங்களினால், இசைவாணை புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், “வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை  இயக்கத்தினை தொடங்கக்  கூடாது” என்று

  12.4.2018     நாளிட்ட       நடப்பாணையின்    மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. 17.5.2018 அன்று இம்மனு விசாரணைக்கு வந்து விசாரணை 6.6.2018க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்கள், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார். இவ்விவரம் அன்றைய செய்தித் தாள்களிலும் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

  மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 2013ல் மாண்புமிகு அம்மா அவர்கள் இவ்வாலையை மூடுவதற்கு உத்தரவிட்டதைப்    போலவே,     தற்போதும்     இவ்வாலை இயங்காமல் இருப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (22.5.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு சட்டபூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   

   

  #2591
  TN Gopalan
  Participant

  இது உண்மையெனில் ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் தேவையில்லாமல் கலவரத்தை உருவாக்கியிருக்கின்றனர். வரும் ஒரு சில தகவல்களும் போராட்டக்குழு வன்முறையில் ஈடுபட்டதாகவே கூறுகின்றன. நேரடியாகச் சென்று தகவல்களறிந்து முழுமையான செய்திகளை இத் தளம் தரமுயலவேண்டும்

  #2592
  TN Gopalan
  Participant

  Arun Janardhanan‏Verified account @arunjei 17m17 minutes agoMore
  Death toll in Tuticorin police firing touches 8, many more critical with bullet injuries. Police sources report fresh round of firing after a group of people tried to protest before the residence of Tuticorin SP, no casualty learnt. @IndianExpress

  #2598
  TN Gopalan
  Participant

  <iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTNCPIM%2Fvideos%2F962945683860769%2F&show_text=0&width=267&#8243; width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

  #2599
  TN Gopalan
  Participant

  Rahul Gandhi‏Verified account @RahulGandhi 3h3 hours agoMore
  The gunning down by the police of 9 people in the #SterliteProtest in Tamil Nadu, is a brutal example of state sponsored terrorism. These citizens were murdered for protesting against injustice. My thoughts & prayers are with the families of these martyrs and the injured.

  #2600
  TN Gopalan
  Participant

  முகநூலில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன்:

  Hariparanthaman
  2 hrs ·
  நச்சுப்புகையை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராடி வருகிறார்கள்.

  100-வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலம் சென்று முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.

  100 நாட்களாக போராட்டம் நடத்தும் மக்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தவில்லை. முதல் மந்திரியும் மற்ற சம்மந்தப்பட்ட மந்திரிகளும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.

  இன்றைய ஊர்வலத்திற்கு அனுமதி தரவில்லை. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் ஊர்வலத்திற்கும் கூட்டம் கூடுவதற்கும், அரசு தடை விதித்தது. நள்ளிரவில் வீடு புகுந்து பல போராட்டக்காரர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள்.

  இப்படியெல்லாம் போராட்டத்தை முடக்க அரசு நடவடிக்கை எடுத்ததால், போராட்டம் இன்று மேலும் தீவிரமடைந்தது. அதற்கு அரசே காரணம்.

  அமைதியான முறையில் ஊர்வலத்தையும் முற்றுகை போராட்டத்தையும் நடத்த அரசு அனுமதித்து இருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது.

  ஊர்வலத்தை காவல் துறை தடுத்தது. லட்சக்கணக்கில் ஊர்வலம் சென்ற மக்கள் காவல் துறை தடுப்பதை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். ஊர்வலம் சென்ற மக்கள் வெள்ளத்தின் மேல் கண்ணீர் புகை குண்டை வீசியும், தடி அடி நடத்தியும் கூட்டத்தை கலைக்கப் பார்த்தது காவல் துறை. லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். கண்ணீர் புகையும் தடி அடியும் கண்டு அஞ்சாமல் ஊர்வலம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறியது. உடனே காவல் துறை அமைதியான மக்கள் கூட்டத்தின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமுற்றனர். இறந்தோர் எண்ணிக்கை மிக கூடுதலாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

  இதற்காக தமிழக அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். 144 தடை போடாமல் ஊர்வலத்தையும் முற்றுகை போராட்டத்தையும் அரசு அனுமதித்து இருந்தால், மக்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்காது; பலர் படுகாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

  தமிழக அரசு ஸ்டெர்லைட் கார்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பல அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிட்டது; பலரை படுகாயப்படுத்திவிட்டது.

  உடனே ஸ்டெர்லைட் ஆலையை மத்திய அரசும் மாநில அரசும் நிரந்தரமாக மூட வேண்டும்; ஆலையின் விரிவாக்க பணிகள் நிறுத்தப் படவேண்டும். உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி இது தான்.

  அடுத்து, மக்களின் உயிரை பறித்ததற்கும், படுகாயப்படுத்தியதற்கும் இந்த அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

  துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று, பலரை படுகாயப்படுத்திய காவல் துறையினரை உடனடியாக சஸ்பெண்டு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  #2631
  TN Gopalan
  Participant

  kanagaraj‏ @cpmkanagaraj 8h8 hours agoMore
  கொலைகார அரசால் குதறப்பட்டு தூத்துக்குடி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காரத்திக் என்கிற மூன்றாமாண்டு மாணவன் உயிர் தற்போது பிரிந்துவிட்டது. இது அரசும் அல்ல! அவர்கள் காவலர்களுமல்லர்!

  #2641
  TN Gopalan
  Participant

  Dhanya Rajendran‏Verified account @dhanyarajendran 7m7 minutes agoMore
  Dhanya Rajendran Retweeted Balamurugan G

  Why can’t people read? The license has not been renewed cos they were polluting. The lengths to which people go to support a Pvt company is astounding.

Viewing 8 posts - 1 through 8 (of 8 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This