ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

Forums Communities Fishermen ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

Viewing 6 posts - 1 through 6 (of 6 total)
 • Author
  Posts
 • #2558
  Nandha Kumaran
  Participant

  தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டம் இன்று 100 வது நாள் ஆவதையொட்டி பொதுமக்கள் கலெக்டர் ஆபீஸை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனையடுத்து 144 தடையுத்தரவு இடப்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  தடையை மீறி நடந்த ஊர்வலத்தின் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயற்சி செய்தனர்.  ஆனாலும், போராட்டக்காரர்கள் ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தினுள் நுழைந்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பெரும் கலவரமாக மாறியுள்ளது.

  இதனிடையே, பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் போராடிய பொதுமக்களில்  ஒரு பெண் உட்பட  3 பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் போராட்டக்காரர்கள் தரப்பில் 5 பேர் பலியாகியுள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம்  நிலவி வருகிறது.

  தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 பேர் உடல்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த பிரேயிம்டன் மற்றொருவர், உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்றும் அருகிலிருந்து சம்பவத்தை கவனித்த ஒருவர் கூறுகிறார்.

  3 பேர் இறந்துள்ளனர் என்ற விபரத்தை தூத்துக்குடி டவுண் போலீஸ் அதிகாரிகளில் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

  #2562
  Nandha Kumaran
  Participant

  தூத்துக்குடியில் நடந்த போராட்டங்கள் – படங்கள்

  Attachments:
  #2569
  Antony Varuvel
  Participant

  போலீஸ் வேன்கள் அடித்து உடைப்பு..தீ வைப்பு

  Attachments:
  #2572
  Nandha Kumaran
  Participant

  இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது

  Attachments:
  #2577
  Nandha Kumaran
  Participant

  இறந்தவர்களின் படங்கள் ..

  Attachments:
  #2587
  Gopi Velpandi
  Participant

  போராடத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் 8 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்கிறார்.

Viewing 6 posts - 1 through 6 (of 6 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This