"சென்னை – சேலம் பசுமை வழி விரைவுச் சாலை வேண்டாம்!"

Forums Inmathi News "சென்னை – சேலம் பசுமை வழி விரைவுச் சாலை வேண்டாம்!"

Tagged: 

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2531
  TN Gopalan
  Participant

  சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழி விரைவு சாலைத் திட்டம் வேண்டாம்! – இ.க.க (மா.லெ.) / CPIML கட்சி கோரிக்கை
  ****************************** ***
  தேசிய நெடுஞ்சாலை எண் 179 எ மற்றும் 179 பி நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக சேலம் முதல் சென்னை வரையில் சுமார் 277 கி.மீ நிலங்களை ஆர்ஜிதம் செய்ய / கையகப்படுத்த உத்தேசித்து இருப்பதாக மத்திய அரசு அறிவிக்கைகளை / Notifications வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே  தமிழக அரசும் இத்திட்டம் அமலாக்கப் படவுள்ளதாக அறிவித்துள்ளது.

  மத்திய,  மாநில அரசுகளால் முன்மொழியப்பட்டுள்ள
  இந்த திட்டமானது தமிழகத்தின் செழிப்பான நிலங்கள் நிறைந்துள்ள பகுதியில், மிகவும் பழமையான கிழக்கு மலைத் தொடரின் அக்கம் பக்கமாகவே இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.

  இதனால், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள
  இலட்சக்கணக்கான மாமரங்கள், வாழை, தென்னை, பாக்கு தோப்புகள், நெல் வயல்கள்,  ்மிக்சுமார் 20,000 ஏக்கர் செழிப்பான விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கையகப்படுத்தவும், அழிவுக்குள்ளாகவும் உள்ளன ; சுமார் 10,000 வீடுகள்/கட்டுமானங்கள், அழிக்கப்பட உள்ளன. 30,000 குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை, வாழ்விடங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  சேர்வராயன், கல்வராயன் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு மலைப் பகுதிகளின் அடிவாரத்தை ஒட்டியே இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலையின் வரைபடங்கள்  காட்டுகிறது.  சுமார் 1000 ஏக்கர் வனநிலங்கள், அரிய வகை செடிகள்/மரங்கள்  மூலிகைகள் அழிக்கப்பட உள்ளன. மலையில் உருவாகும் நீர்வழித் தடங்கள், உயிர் வாழும் விலங்குகள், பறவைகள், அரிய உயிரினங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

  ஏற்கனவே, சேலம் – சென்னைக்கு இடையே பொதுமக்கள், சரக்கு வாகனங்கள்  விரைவாக செல்லுவதற்கு நான்கு (1) சேலம்- ஆத்தூர்-விழுப்புரம்_சென்னை 2)சேலம்_அரூர்-வேலூர்-சென்னை 3)சேலம்_அரூர்_திருவண்ணாமலை _சென்னை 4)சேலம்_கிருஷ்ணகிரி_வாலாஜா_சென் னை என)  நெடுஞ்சாலைகள் நடப்பில் பயன்பாட்டில் உள்ள போது புதிதாக ஒரு நெடுஞ்சாலை அமைப்பது  தேவையில்லாததாகும்.

  பாஜக அரசின் கார்ப்பரேட் சார்பு பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் வரும்,
  இந்த புதிய பசுமை சாலை /Green Corridor திட்டம்,  தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொழிற்சாலைகளை நடத்திவரும் / புதிய திட்டங்கள் அமைத்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களான ஜிந்தால், அம்பானி, ஆதானி போன்றவர்களின் நலனுக்காகவே அமைக்கப்படுவதாகும்.

  ஏற்கெனவே வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் விவசாயிகள் இருக்கும்போது,
  சிறு, குறு ஏழை விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்க போடப்பட்டுள்ள இத்திட்டத்தை பெருமுதலாளிகள் மற்றும் சுயநலன்கள் சார்ந்து அதிமுக அரசாங்கம் ஆதரித்து நிலம் கைகப்படுத்தும் பணிகளை துவக்கியுள்ளது, வெந்த புண்ணில் ஈட்டியைப் பாய்ச்சுவதாகும்.

  எனவே, “கார்ப்பரேட் ஆதரவு விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, இயற்கை விரோத பசுமை வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநில கமிட்டி கோருகிறது.

   

  Attachments:
Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This