கடற்கரைகளில் மறுக்கப்படும் சுகாதாரம்

Forums Communities Fishermen கடற்கரைகளில் மறுக்கப்படும் சுகாதாரம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2507
  Kurumpanai Berlin
  Participant

  [20/05, 07:16] Berlin: *கடற்கரைகளில் மறுக்கப்படும் சுகாதாரம்*
  கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்கள் மிகமிக நெருக்கமாக அமைந்துள்ளன. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 72 கி.மீ நீளமுள்ள கடற்கரை கிராமங்களில் கடலுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் இடைப்பட்ட 200 மீட்டர் பகுதியே கடற்கரை மக்களின் பூர்வீகம். நெருக்கடியான இந்த இடத்தில்தான் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
  ?குமரி மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 1111 மக்கள் வாழ்கின்றனர். ஆனால் கடற்கரையில் ஒரு சதுர கி.மீ. க்கு 4500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?!
  ?மூன்றுவீடுகளுக்கு ஒரேஒரு சுவர்தான் பக்கச்சுவர். அவ்வளவு இடநெருக்கடி என்றால் நம்புவீர்களா?!
  ?பஞ்சாயத்து அமைப்புகளும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் வாரம் ஒருமுறை வழங்கும் 40 லிட்டர் தண்ணீரை வைத்துத்தான் குடிக்க- குளிக்க- துணிதுவைக்க- சமையல் செய்ய- பிற செலவுகளுக்கு என்று பயன்படுத்தும் மேஜிக் நடக்கிறது என்றால் நம்புவீர்களா?!
  ?வடிகால் ஓடைகள் கட்ட வழியில்லாமல் கழிவுநீர் அனைத்தும் வீடுகளை ஒட்டியே பயணப்படுகிறது என்றால் கற்காலம் நினைவுக்கு வருகிறதா?!
  ?கடலைத் தாயாக நினைத்து மீனவர்கள் போற்றும்போது அந்தக் கடலில் எல்லா குப்பைகளையும் கொட்டி குப்பைத் தொட்டியாக்கும் சமீகம் கடற்கரை மக்களின் குப்பைகளை எடுத்து மேலாண்மை செய்ய இடமில்லை என்றுகூறி குடியிருப்புப் பகுதிகளிலே கொட்டிவைப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!
  இவ்வளவு நெருக்கடியில் இருக்கும் கடற்கரை கிராமங்களில் சுகாதார சீர்கேடு எப்படி உக்கிரமாக இருக்கும் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால் கடற்கரை கிராமங்களில் *அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை* தொடங்கி சுகாதாரத்தைப் பேணவேண்டும் என்றும் *நெய்தல் மக்கள் இயக்கம்* கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.
  *குறும்பனை, இனயம்புத்தன்துறை, மணக்குடி* போன்ற பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கவேண்டும் என்பது கடந்த பதினைந்து ஆண்டு கோரிக்கை. ஆண்டுக்கு 10,20 ஆரம்ப சுகாதார நிலையங்களை புதிதாக அமைக்கும் அரசு கடற்கரை கிராமங்களில் மட்டும் PHC அமைக்கவே இல்லை. காரணம் மணக்குடிக்கு சிங்களேயர்புரியிலும், இனயம் புத்தன்துறைக்கு செந்தறையிலும், குறும்பனைக்கு குளச்சல் கருங்கலில் PHC இருப்பதாக தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் ஆலோசனையை அதிகாரிகள் கூறுகிறார்கள். எங்கு சுகாதாரப்பணிக்கான தேவை இருக்கிறதோ அங்கு PHC அமைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச உரிமைகூட மறுக்கப்படுகிறது.
  [20/05, 07:16] Berlin: சட்டமன்றத்தில் பலமுறை பேசப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன்IAS அவர்களை சந்தித்து விரைவில் PHC அமைக்கப்படும் என்று *கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு* உத்தரவாதம் பெற்றது. பொது சுகாதார இணை இயக்குநர் மூலமாக பலமுறை கருத்துரு அனுப்பியது என்று அத்தனையும் நடந்தபிறகும் இதுவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் குறும்பனைக்கும், இனயம் புத்தன்துறைக்கும், மணக்குடிக்கும் அமைக்கப்படவே இல்லை. இந்த ஆண்டிலாவது மறுக்கப்பட்ட சுகாதாரப் பணிகள் கடற்கரையில் நடக்குமா? அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுமா என்று கடற்கரை மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  *குறும்பனைபெர்லின்*

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This