Forums › Communities › Fishermen › முப்பது ஆண்டு எலும்புக்கூடு வீடு
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 9 months ago by
Kurumpanai Berlin.
-
AuthorPosts
-
May 19, 2018 at 9:47 pm #2503
Kurumpanai Berlin
Participantதடையை மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மாவட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டம்.
எம்.எல்.ஏ ஆஸ்டின் அவர்களை தாக்கிய காவல்துறை, மற்றும் அருட்பணி .ஜார்ஜ் பொன்னையா தாக்குதல் .
போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறலால் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் தாக்குதல் .
தடையை மீறி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், மக்கள் ஆர்ப்பாட்டங்கள்.
*முப்பது ஆண்டு எலும்புக்கூடு வீடு*
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது *சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் திட்டம்* அப்போது 27000 ரூபாய் திட்ட மதிப்பில் வீடில்லாத மீனவர் கூட்டுறவு சங்க ஏழை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கட்டி வழங்கப்பட்டது. அதன்பின் வந்த கருணாநிதி அரசும் அத்திட்டத்தைத் தொடர்ந்தது. இறுதியாக இந்த வீடுகளின் திட்ட மதிப்பு 37000 ஆனது. பின்பு கலைஞர் வீட்டுவசதித் திட்டம் வந்தபோது மீனவர்களுக்கான சிங்காரவேலர் திட்ட நிதி கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தோடு இணைக்கப்பட்டு மீனவர்களுக்கான வீட்டு உரிமை பறிக்கப்பட்டதோடு பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் கிடைத்துக் கொண்டிருந்த வீட்டு உரிமை ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டது.
அதன்பின் வந்த ஜெயலலிதா அரசு பசுமை வீடுகள் திட்டம் கொண்டுவந்து ஒட்டுமொத்தமாக மீனவர்களின் வீட்டு உரிமையைப் பறித்துவிட்டார்கள். ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டுமே பசுமை வீடுகள் என்று அறிவித்துவிட்டு ஊராட்சிகளில் குடியிருக்கும் மீனவர்களுக்கு 500மீ. க்குள் CRZ என்ற ஒரு காரணத்தைக்காட்டி வீடுகள் வழங்க முடியாது என்று *தமிழக ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை* அறிவித்தது. அந்த சட்டத்தை ரத்து செய்து கடற்கரையில் வாழும் தகுதியுள்ள மீனவர்களுக்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று *கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்* மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு வெற்றிபெற்றது.
தற்போது கடந்த 25, 30 ஆண்டுகளாக சிங்காரவேலர் தொகுப்புவீடுகளில் குடியிருக்கும் மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். முக்கால் சென்ட் நிலத்தில் 37000 ரூபாயில் கட்டி வழங்கப்பட்ட இவ்வீடுகள் இப்போது காங்கிரீட் பெயர்ந்து சுவரெல்லாம் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் வாழவே தகுதியற்ற இடமாக மாறியிருக்கிறது. இவ்வீடுகள் இடிந்து விழுந்து உள்ளே படுத்திருந்த மூன்றுபேர் இறந்த மூன்று விபத்துகள் நடந்த பிறகும் இந்த வீடுகளை புதிதாகக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை அரசும் மீன்வளத்துறையும் எடுக்கவில்லை.
சிங்காரவேலர் தொகுப்ப வீடுகளில் குடியிருக்கும் மீனவர்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு எப்போது இடிந்துவிழுமோ என்று அச்சப்பட்டு இரவு நேரங்களில் குழந்தை குட்டிகள் மற்றும் வயதானவர்களுடன் பக்கத்து வீடுகளில் ஒண்டிக்கிடக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கக்கேட்டு *நெய்தல் மக்கள் இயக்கம்* கடந்த பத்து ஆண்டுகளாகப் போராடிவருகிறது. இதுவரை ஐந்து கலெக்டர்கள் அந்த வீடுகளை வந்து பார்த்துவிட்டார்கள். மூன்று எம்எல்ஏக்கள் பார்த்துவிட்டார்கள். வீடுமட்டும் இதுவரை மாற்றப்படவில்லை.
சொந்தமாக வீடுகட்ட வசதியில்லாத ஏழை மீனவர்கள் இந்த வீட்டில் வாழ அச்சப்பட்டு கடன் காப்பு வாங்கி தாலியவித்து பீலியவித்து அந்த வீடுகளை புதுப்பித்தனர். அப்படியும் செய்ய வழியில்லாத சுமார் 900 வீடுகள் இன்னும் குமரி மாவட்டத்தில் உள்ளது. இந்த வீடுகளைக் கணக்கெடுத்து அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். ஒரு பயனாளிக்கு ஒருமுறைதான் உதவி செய்ய முடியும். எனவே இந்த வீடுகளுக்குப்பதிலாக மாற்றுவீடுகள் வழங்க முடியாது என்று அரசு கையை விரிப்பதாக மீன்வளத்துறை சொல்கிறது. அப்படியென்றால் அந்த வீடுகளில் குடியிருக்கும் மக்களின் கதி?!
இப்போது அந்த வீடுகளில் பயனாளிகளின் வாரிசுகள்தான் குடியிருக்கிறார்கள். எனவே பயனாளியில்லாத அவர்கள் பெயரில் வீடுகள் வழங்கலாம் என்று கோரிக்கை வைக்கிறோம். தற்போதைய தமிழக அரசு 50000 வீடுகள் ஆண்டுக்கு கட்டிக் கொடுப்போம் என்று சொன்ன சாதனைத் திட்டத்திலாவது இந்த மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகட்டிக் கொடுங்கள் என்று கேட்கிறோம். அரசும் மீன்வளத்துறையும் இதைச் செய்ய முன்வருமா?!
*குறும்பனைபெர்லின்*
மக்களின் எதிர்ப்பால் தாக்குப் பிடிக்க முடியாத காவல்துறை திணரல்.நமக்கு மாபெறும் வெற்றி .
இதுவரை குமரி மாவட்டத்தில் இது போல் ஒரு சூழல் ஏற்பட்டதில்லை என மக்கள் கருத்து .
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.