கன்னியாகுமரி அருகே கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மீனவர்கள் தடையை மீறி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, மீனவர்களின் போராட்டத்தை தடுக்க கடலோர கிராமங்களில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள், போராட்டத்திற்கு செல்லவிருந்த மீனவர்களை வழியிலேயே தடுத்ததால் , மீனவர்கள் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
மீனவர்கள் துறைமுக எதிர்ப்பு போராட்டம் அறிவித்திருந்த சூழலில், பாஜக சார்பில் மாவட்ட அளவில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மீனவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்திருந்த பந்தால் குமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.