மீனவர்களை குற்றவுணர்ச்சிக்கு இந்த அரசும் சமூகமும் தள்ளுகிறது.

Forums Communities Fishermen மீனவர்களை குற்றவுணர்ச்சிக்கு இந்த அரசும் சமூகமும் தள்ளுகிறது.

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • Author
  Posts
 • #2480
  John Arulsamy
  Participant

  மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகும் பொழுது எளிதாக அவர்கள் மேல் விழும் குற்றச்சாட்டு, “எல்லை தாண்டி மீன் பிடித்தனர்” என்பதே. எல்லை என்ற வார்த்தையை கேட்டதும் நமது மீனவர்களும், மிகப்பெரிய தவறென்று பயந்து “இல்லையில்லை, கச்சத்தீவிற்கு இந்தப்பக்கமே வலையிழுத்தோம்” என்றே சமாளிக்க வேண்டிய தேவையிலிருக்கின்றார்கள்.

  ஆனால், நிதர்சணம் வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே தங்களது தொழிலை அமைத்துக்கொள்ளும் அமைப்பு அல்லவே கடல் தொழில். காற்று மற்றும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி கடல் வாழ் உயிரினங்கள் தங்களுடைய வாழ்விடங்களை மாற்றிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் கடல்வாழ் உயிரினங்களை சுவர் கட்டி அடைத்து வைக்கவும் முடியாது. குறிப்பிட்ட இடத்தில்தான் மீன்பிடிக்க வேண்டுமென்று ஒன்றுமில்லாத இடத்தில், வெறும் வலையை இழுத்து வர முடியாது.

  மேலும், எல்லை தாண்டிய மீன்பிடி என்பது பல உலக நாடுகளில் வழக்கத்திலிருப்பது. மிகக்குறுகிய கடல் எல்லையை கொண்ட இத்தகைய சிறிய கடல்பரப்பில் இவ்வளவு மக்கள் வலையிழுக்க முடியும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.  மேலும் இந்திய அரசு ஆண்டுதோறும்  “வெட்ஜ் பேங்க்” பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கைக்கு இலவசமாக வழங்கி வருகிறது என்பது அதிகமானோருக்கு தெரிவதில்லை. வெட்ஜ் பேங்க் எனப்படுவது உலக மீன்பிடியின் சொர்க்கம். மேலும் அது இந்திய எல்லைக்குள் இருக்கிறது. அதைத்தான் இலங்கைக்கு ஆண்டுதோறும் இலவசமாக குத்தகைக்கு விடுகிறது இந்திய அரசு. அந்த குத்தகையை இலங்கையின் பணக்கார மீனவர்களே உபயோகப்படுத்துகின்றனர்.

  இந்த மாதிரியான சில விசயங்களில் சத்தமின்றி ஈடுபடும் அரசுதான், மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை எனும்பொழுது “எல்லை தாண்டி மீன்பிடித்தீர்கள்” என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரணத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு வருகின்றனர். இது மீனவர்களுக்கு குற்றவுணர்ச்சியை உண்டாக்கும் ஒரு தந்திர செயலன்றி வேறெதுவும் இல்லை.

  இலங்கைக்கு கடல் எல்லையை தாரை வார்க்கும் இந்திய அரசு எங்களையும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நட்பு நாடு என்று பலவிதங்களில் உதவிய இந்தியா “எல்லை தாண்டிய மீன்பிடிக்கான ஒப்பந்தம்” ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப்போவதில்லை.

  எனவே மீனவர்களுக்கு குற்றவுணர்ச்சி எதுவும் தேவையில்லை. கடல் நமது உரிமை. இந்த கடற்படையும், மிகப்பெரும் செல்வந்தர்களும் கடலில் இறங்கிய பின்னேதான் கடலின் பாதுகாப்பும், கடல் வளமும் அழிந்துபோயிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எல்லை கடந்த மீன்பிடியை உறுதிப்படுத்த சொல்லி அரசிடம் நமது கோரிக்கைகளை வலுவாக எடுத்து வைப்போம். ஒன்று சேர்வோம்.

  #2495
  Gunavathy Manavalan
  Participant

  எனவே மீனவர்களுக்கு குற்றவுணர்ச்சி எதுவும் தேவையில்லை. கடல் நமது உரிமை. இந்த கடற்படையும், மிகப்பெரும் செல்வந்தர்களும் கடலில் இறங்கிய பின்னேதான் கடலின் பாதுகாப்பும், கடல் வளமும் அழிந்துபோயிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எல்லை கடந்த மீன்பிடியை உறுதிப்படுத்த சொல்லி அரசிடம் நமது கோரிக்கைகளை வலுவாக எடுத்து வைப்போம். ஒன்று சேர்வோம்.</p>

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This