தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (18/05/2018)

Forums Communities Fishermen தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (18/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2442
    Nandha Kumaran
    Participant

    காற்றின் வேகம்   :  கன்னியாகுமரியில் மணிக்கு 17 முதல்  கி.மீட்டர்கள்  முதல் 25 கி.மீட்டர்கள் வேகத்தில் வடமேற்கு, மேற்கு திசை நோக்கி வீசும். ராமநாதபுரம் மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 26 கி.மீ முதல் 32 கி.மீ வரை இருக்கும். சென்னை,  நாகை உள்ளிட்ட  கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்  மணிக்கு  13  கி.மீட்டர்கள்  முதல்  26 கி.மீட்டர்கள் வேகத்தில் தெற்கு மற்றும்தென்மேற்கு திசை நோக்கி வீசும்.

    கடல் அலை : கன்னியாகுமரியில்  4 அடி உயரத்திலும், சென்னையில் 3 அடி முதல் 4 அடி உயரத்திலும்  கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.

    கடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.4  கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 0.6 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரம் மற்றும் குமரியில்  0.5 கி.மீட்டர் வேகத்தில்  மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கியும் இருக்கும்.

    கடல்மட்ட வெப்ப  நிலை : 30 மற்றும் 31 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

     

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This