குளச்சலில் இனையம் புத்தன் துறை முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 42 மீனவர் சங்க பிரதிநிதிகள் கூடி மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனும் கலந்து கொண்டார். கூட்டத்தில் மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குதல், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்விடங்களையும் நாசப்படுத்தும் வகையில் கொண்டு வரும் எந்தவித திட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும், பன்னாட்டுக் கப்பல்கள் இந்திய கடல்பகுதியில் மீன் பிடிக்க வழங்கப்பட்டுள்ள உரிமையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.