சாகர் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை

Forums Communities Fishermen சாகர் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2409
  Nandha Kumaran
  Participant

  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் சென்னையில் பத்திரிக்கையாளரகளை சந்தித்தார்.

  நேற்று ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கிழக்கு திசையில் ஏமன் நோக்கி செல்லகூடும் என்பதால் தென் மேற்கு அரேபிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

  மேலும் இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக கட்ந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக புதுகோட்டை மாவட்டம் பெருங்களுர் , விருதுநகர் மாவட்டம் சாத்துர் 5 செ மீ பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

  வரும் 24 மணி நேரத்தை பொருத்த வரையில் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This