தென் மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஏடன் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இந்திய கடலோர பகுதிகளை பாதிக்க வாய்ப்பில்லை.
இதனால், தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தென் மேற்கு அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்வதை அடுத்த 24 மணி நேரத்திற்கு தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது