தமிழ்நாடு மீன்வளக் கல்லூரி

Forums Communities Fishermen தமிழ்நாடு மீன்வளக் கல்லூரி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2288
  Kurumpanai Berlin
  Participant
  1. தமிழ்நாட்டில் மீன்வளப் பல்கலைக்கழகம் மூலமாக *தூத்துக்குடி, நாகப்பட்டணம், திருவள்ளூர்* போன்ற இடங்களில் மீன்வளக்கல்லூரிகள் இயங்கிவருகிறது. 1075 கி.மீ நீளமுள்ள தமிழ்நாட்டில் நான்கில் ஒருபங்கு மீனவர்கள் வாழும் 72 கி.மீ.நீளமுள்ள குமரி மாவட்டத்தில் *ஒரு மீன்வளக் கல்லூரி* அமைக்க வேண்டும் என்று 2010- ம் ஆண்டுமுதல் *நெய்தல் மக்கள் இயக்கமும், கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பும்* முயற்சி செய்துவருகிறது. மீன்துறை அமைச்சர், மீன்துறை செயலாளர், மீன்துறை கமிசனர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் என்று எல்லா தரப்பிலும் பலமுறை சென்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் *மீன்வள மானியக் கோரிக்கை* யின் போதும் குமரி மாவட்டத்திற்கு மீன்வளக்கல்லூரி அமையும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டு ஏதோ காரணங்களுக்காக தட்டிப்பறிக்கப்படும். 2017 மானிய கோரிக்கையின் போதும் குமரிக்கு வரவேண்டிய கல்லூரி வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டு நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இரண்டாவது கல்லூரியாக *வேதாரண்யத்தில்* அமைக்கப்பட்டது. நாங்கள் விடாமல் முயற்சி செய்ததனால் *குமரி மாவட்டத்தில் மீன்வளக்கல்லூரி அமைக்க உரிய இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வானதும் கல்லூரி அமைக்கப்படும்* என்று பதிவாளர் பதில் தந்துள்ளார். இந்த ஆண்டு நிச்சயமாகக் கல்லூரி அமையும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.
   *குறும்பனைபெர்லின்*
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This