Forums › Communities › Fishermen › மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*
- This topic has 7 replies, 5 voices, and was last updated 2 years, 9 months ago by
TN Gopalan.
-
AuthorPosts
-
மே 14, 2018 at 12:16 மணி #2263
Kurumpanai Berlin
Participant*
முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் இருந்த மீனவர்கள் 2007-ம் ஆண்டுமுதல் *மீனவர் நலவாரியம்* என்று தனியாக ஆரம்பிக்கப்பட்டு அதில் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். நலவாரிய பயன்களின் பட்டியலில் கல்வி உதவித்தொகை, பேறுகால உதவி, இறப்பு ஈமச்சடங்கு நிதி, இறப்புநிதி, 60 வயதுக்குமேல் மாதம் 1000 ரூ. பென்சன் என்று இருக்க… மீனவர்களில் இதுவரை ஒருவருக்குக் கூட பென்சன் வழங்கப்பட வில்லை. 60 வயதில் ஓய்வு பெற்றவர்களாக அறிவித்து *மீனவர் கூட்டுறவு சங்கத்திலிருந்து* நீக்கும் அரசு அடுத்த ஆண்டை அந்த மீனவர்களுக்கு மாதம் ரூ.1000 பென்சன் வழங்கியிருக்க வேண்டும். மீனவர்கள் நலவாரியம் மூலம் பென்சன் கேட்டால் *தமிழ்நாடு வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் ஆதரவற்ற கைவிடப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படுவதால் நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க இயலாது* என்று பதில் கூறுகிறது.
?எல்லா நலவாரிய உறுப்பினர்களுக்கும் பென்சன் வழங்கும்போது மீனவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன்?
?நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கும் அனைத்து மீனவர்களும் தங்கள் உழைப்பின் காலத்தில் ஆண்டுதோறும் நலவாரிய பயன்களுக்காக சந்தாவும் இன்னபிற பிடித்தப் பணங்களும் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் கட்டி வருகின்றனர். அந்த பணத்திலிருந்து பென்சன் கொடுக்காமல் அந்த பணத்தை அரசு என்ன செய்கிறது?
?தான் நலவாரியத்தில் கட்டிய பணத்திலிருந்து அரசு கொடுக்க வேண்டிய உரிமைப் பட்ட பென்சனை வழங்காமல் *ஆதரவற்ற-கைவிடப்பட்ட* பட்டியலில் மீனவர்களைச் சேர்த்து கிடைக்காத வருவாய்த்துறை உதவிக்கு கைகாட்டுவது ஏன்?
எனவே மீனவர்களின் சேமிப்புப் பணத்திலிருந்து அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய முதியோர் உதவித்தொகையை மீனவர் நலவாரியம் மூலம் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று *நெய்தல் மக்கள் இயக்கம்* நீண்ட காலமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது. அது இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது நிறைவேறுமா?
*குறும்பனைபெர்லின்*மே 14, 2018 at 7:35 மணி #2287Johnson Dominic
Participantநல்ல பதிவு
மே 18, 2018 at 10:28 காலை #2458Nandha Kumaran
Participantஇது குறித்த விபரம் தலைமைசெயலக நிருபர் சங்கர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி பதில் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் வருவாய்த்துறையிலும் விசாரிக்கப்பட வேண்டியது எனக் கூறினார்
இதற்கு முன்னர் திரு.பெர்லின் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களுக்கு, அதிகாரிகள் கூறியுள்ள பதிலின் விபரம் இங்கு இணைக்கப்படுகிறது.
Attachments:
மே 20, 2018 at 11:00 காலை #2512sankar s
Participantமீனவ நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பென்சன் கிடைக்கவில்லை என்ற விவரம் தொடர்பாக அந்த துறையின் அமைச்சர் டி. ஜெயக்குமாரிடம் கேட்போது அவர் கூறியதாவது:-
மீவர்களை காக்கும் அரசாக இந்த அரசு விளங்குகிறது. பென்சன் என்பது வருவாய்துறை கீழ் வருகிறது. அந்த துறையின் மூலமாகதான் முதியோர் உதவி தொகை உள்பட அதை உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
எந்த வாரியமாக இருந்தாலும், அதில் உள்ள உறுப்பினர்களுக்கு பென்சன் என்பது வருவாய்துறை மூலமாகதான் வழங்கப்படுகிறது. ஆனாலும் மீனவ நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. தகுதி வாய்ந்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக பென்சன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தகுதியான நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பென்சன் கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தக்க ஆவனத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்றப்படி வாரியத்தில் உள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வாரியத்தின் அனைத்து பலன்களும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. மீனவர்களின் அரணாக இந்த அரசு விளங்குகிறது.
அதுமட்டுமல்ல பென்சன் கிடைக்காத வாரிய உறுப்பினர்கள் வாரியத்தில் மனு கொடுக்கலாம். அது வாரியத்தின் மூலமாக வருவாய்துறை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீனவர்கள் சங்கங்கள் வைத்துள்ளார்கள். அந்த சங்கங்கள் மூலமாகவும் அவர்களது பிரச்சினையை வாரியத்துக்கு கொண்டு வரலாம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சங்கர் – சென்னை.
மே 20, 2018 at 1:05 மணி #2513Kurumpanai Berlin
Participantமீனவர் நலவாரியம் என்று ஒன்று செயல்படவே இல்லை. கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் மீன்வளத்துறை அமைச்சரின் தலைமையில் வாரியம் செயல்பட்டது. அந்த வாரியத்தின் உறுப்பினராக குமரி மாவட்டத்திலிருந்து திரு.பசலியான் அவர்கள் இருந்தார்கள். அ.தி.மு.க ஆட்சி வந்து இந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை மீனவர் நலவாரியம் அமைக்கப்படவுமில்லை. இதுவரை ஒரு கூட்டம்கூட நடத்தப்படவில்லை. அப்படியிருக்க மீனவர்களின் கோரிக்கையை எந்த வாரியத்தில் போய் சொல்லமுடியும்?
பென்சன் வழங்குவது வருவாய்த் துறை மூலம்தான் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் உழவர் நலவாரியம், கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தையல் கலைஞர்கள் நலவாரியம் போன்ற எல்லா நலவாரியங்களிலும் அதன் உறுப்பினர்களுக்கு பென்சன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களை வருவாய்த் துறையில் போய் கேளுங்கள் என்று சொல்லவில்லை. வருவாய்த் துறைமூலம் கொடுப்பது ஆதரவற்றோர், முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் சமூக நல உதவிகள். மீனவர்கள் கேட்பது தாங்கள் ஆண்டுதோறும் சந்தா செலுத்தி தாங்கள் உழைக்கும் காலங்களில் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் தனது பங்கைச் செலுத்தி தன்னால் உழைக்க முடியாமல் ஓய்வுபெறும் போது ஓய்வூதியம் பெறுவது. தன்னிடமிருந்து பணம் பிடிக்கும் நலவாரியம் அந்தப் பணத்தைத் தரவேண்டியது உரிமைப்பட்ட விசயம். அதைத் தரமறுப்பது ஏன்?
குறும்பனைபெர்லின்.
மே 20, 2018 at 1:22 மணி #2514Kurumpanai Berlin
Participantமீனவர் நலவாரிய திட்டத்தில் ஓய்வுபெறும் மீனவர்களுக்கு பென்சன் வழங்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சந்தாவும் பங்குப்பணமும் வழங்குகிறார்கள் மீனவர்கள். எல்லா நலவாரியங்களிலும் அந்தந்த நலவாரியங்களே ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் மீனவர் நலவாரியத்தில் மட்டும் வருவாய்த் துறையை அணுகச் சொல்வது என்ன நியாயம்? நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து பென்சன் பெற காத்திருப்போரின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில் கொடுப்பது 18 வயதுக்குமேல் ஆண் பிள்ளைகள் இல்லாத , சொந்தமாக வீடில்லாத, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்குத்தான் உதவித் தொகை வழங்கப் படுகிறது. நலவாரியம் மூலம் வழங்கப்படுவது நலவாரிய உறுப்பினராக செயல்பட்டு 60 வயதைக்கடந்த அனைவருக்கும் கொடுக்க வேண்டியது. மீனவர்களின் உரிமையைப்பறித்து வருவாய்த்துறையில் பிச்சை கேட்கச் செய்வது எந்த வகையில் நியாயம்?!
குறும்பனைபெர்லின்.
மே 20, 2018 at 2:27 மணி #2515sankar s
Participantசார் வணக்கம்
நீங்கள் சொல்வது எனக்கு நன்கு புரிகிறது. இது குறித்து மீண்டும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டு அது குறித்த விளக்கத்தை பதிவு செய்கிறேன்.
அதேநேரத்தில் வருவாய்துறை பற்றி சொல்லும்போது… எல்லா வாரியமும் அதன் உறுப்பினர்களுக்கு நேரடியாக பென்சன் கொடுபதாவக தெரியவில்லை. வாரியங்கள் வருவாய்துறையிடம் பென்சன் பெற தகுதி உடையர்வர்களின் பட்டியலை கொடுத்து அதன் மீது உரிய ஆவன சரிபார்ப்பு முடிந்த பின்னர் வருவாய்துறையிடம் இருந்து தொகையை பெற்று வழங்குவதாகதான் கூறப்படுகிறது. வேண்டும் என்றால் மீணடும் அது தொடர்பாக அமைச்சரிடம் விளக்கம் கேட்டு பதிவு செய்கிறேன்.
அதேநேரத்தில் வருவாய்துறையின் அமைச்சர் உதயக்குமாரிடமும் விளக்கம் கேட்க முயற்சிக்கிறேன்.
நன்றி.
மே 20, 2018 at 4:46 மணி #2516TN Gopalan
Participantசங்கர் வாழ்த்துக்கள். உங்கள் முன்முயற்சியும் அமைச்சரின் பதிலும் நாம் தொடர்ந்து அரசிடம் கேட்கமுடியும், ஏதோ ஒருவித பதிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்துகிறது…குரும்பனை பெர்லின் போல் இன்னும் பலரும் இத் தளத்தை பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.