குமரியின் மேற்குப் பகுதியில் நாகர்கோயிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கடலோர கிராமமாக தூத்தூர் அமைந்துள்ளது. 1986 வரை இந்த கடலோர கிராமமானது ஏழுதேசம் பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. பின்னர் 17 வார்டுகளாகக் கொண்ட தனி பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டது.
இக்கிராமமானது, 5 கிலோமீட்டர்கள் தொலைவிற்கு கடற்பகுதியை கொண்டுள்ளது. கிழக்கில் அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்ம சானலும், தெற்கில் குழித்துறை ஆறும், வடக்கில் வள்ளவிளை கிராமமும், மேற்கில் அரபிக்கடலும் சூழ்ந்துள்ள பகுதியாக இது உள்ளது.