கர்நாடக மீன்களை கோவா கொண்டுவர தடை

Forums Communities Fishermen கர்நாடக மீன்களை கோவா கொண்டுவர தடை

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Kalyanaraman M 10 months, 2 weeks ago.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15119

  Kalyanaraman M
  Keymaster

  கர்நாடக மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மாலின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி அம்மாநில மீன்களை கோவா கொண்டுவர தடை விதிக்கபட்டுதுள்ளதால் மத்திய கர்நாடக பகுதிகளில் மீன்களின் விலையில் 50 சதவீகித சரிவு ஏற்பட்டது.

  கர்நாடக மாநிலத்திலிருந்து கோவா மாநிலத்திற்கு கொண்டுவரப்படும் மீன்களை கோவா கொண்டுவர கடந்த 4 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஜூலை மாதத்தில் பிற மாநிலங்களில் இருந்து கோவாவில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பார்மாலின் எனும் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை பரப்பும் இரசாயனம் கலக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனால் கோவா மாநில உணவு பாதுகாப்பு துறை தீவிரமாக கண்காணித்து மீன்களை பரிசோதித்து வந்தனர்.  பிறமாநில மீன்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டிருந்தது அதையும் மீறி மீன்கள் வருவதாக புகார்கள் வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை கர்நாடகா விலிருந்து கோவா மாநிலத்திற்கு வரும் கண்டைனர் லாரிகளை சோதனையிட்டு மீன் ஏற்றி வரும் கண்டைனர் லாரிகளை நுழையவிடாமல் தடுக்கும்படி சுற்றறிக்கை அனுப்பினார்கள்.

  இதை அடுத்து கர்நாடக மாநில உடுப்பி மத்திய கர்நாடகா,  தென் கர்நாடகா,   பகுதிகளில் இருந்து வந்த கண்டைனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது.

  கோவா போலீஸ் மஜாலி சோதனை காவடியில் தடுத்து நிறுத்திவிட்டனர்.

  கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அப்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் கர்நாடக மீன் வியாபாரிகளால் அப்பொழுது அதிக அளவிலான மீன்களை கோவா கொண்டு வர இயலவில்லை அப்போது ஆந்திர,   தமிழ்நாடு மீன்கள் அதிக அளவில் கோவாவிற்கு கொண்டுவரப்பட்டது.

  ஆழ்கடலில் மீன்பிடித்துவரும் ஏராளமான மீனவர்கள் மீன் விலை சரிவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

  கோவா மாநில உணவு பாதுகாப்புதுறை  அதிகாரிகள் எடுத்துள்ள மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவா மாநில மீன் இறக்குமதியாளர்களின் லாரிகளின் லைசன்ஸ் புதுப்பிக்கப்படும் போது கர்நாடக மாநில மீன்களை கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.

  கோவா அரசின் நடவடிக்கைகளால் கோவா கொண்டுவரப்பட்ட மீன்கள் திரும்பவும் கர்நாடகாவில் விற்பனை செய்ய இயலாமல் ஏராளமான மீன்களை கார்வார் நகரமைதானம் ஒன்றிய மண்தோண்டி மீன்களை புதைக்கநேரிட்டது.

  இப்போது மீன்கள் தடுக்கப்பட்டதால் கர்நாடகாவில் மீன்களின்விலை 50சதவிகித அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

Viewing 1 post (of 1 total)

கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This