துறைமுகத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு ஏன்?

Forums Communities Fishermen துறைமுகத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு ஏன்?

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Kalyanaraman M 2 weeks, 2 days ago.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #15117

    Kalyanaraman M
    Keymaster

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகில் கேரள மாநிலம் பொழியூரில்  கட்டப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர் .

    கேரள மாநிலம் குளத்தூர் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பொழியூர் கடற்கரையில் புதியதாக மீன்பிடி துறைமுகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது   .  இதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்வதற்கான பணியில் துறைமுக பொறியியல் பிரிவு ஈடுபட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த மீனவர் அமைப்பினர்    ” சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடியவிளைவுகள் பற்றி கண்டறிய வேண்டும்,   என்றும் தெரிவித்தனர்.

    இது சம்மந்தமாக கருத்து தெரிவித்த கேரள சுதந்திர மீன்பிடி தொழிலாளர் சம்மேளனசெயல் தலைவர் ஆண்டோ எலியாஸ். “பொதுவாக கேரளாவில் புதிய எந்த மீன்பிடி துறைமுகங்களும் கட்டத்தேவையில்லை“என்பதுதான் தங்கள் கருத்து எனகூறினார்.

    மாநிலத்தில் புதியதாக மீன்பிடி துறைமுகங்கள் தொடங்குவதற்கான ஆலோசிக்கும் முன்னதாக தற்போது உள்ள மீன்பிடி துறைமுகங்களின் செயல்பாட்டு நிலைபற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொழியூர் மீன்பிடி துறைமுகம் புதியதாக கட்டுவது மாநில அரசின் நிதியை பாழடிப்பதாகவே இருக்கும் என்றும் ஆண்டோ கூறினார்.

    முத்தாலப்புழியில் புதியதாக மீன்பிடி துறைமுகம் கட்ட மாநில அரசு பெரும் தொகை செலவழித்திருந்தாலும் இதுவரைஅந்த துறைமுகம் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

    அந்த புதிய துறைமுகம் பகுதியில் தீவிர கடல் அலைகளின் போது ,படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் அவ்வப்போது தூக்கி எறியப்படுவதால் அந்ததுறைமுகத்தை ஒரு கரும்புள்ளியாகவே மீனவர்கள் கருதுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This