சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

Forums Inmathi News சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15082
  Kalyanaraman M
  Keymaster

  தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3-ம் தேதி (இன்று) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

  இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

  தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற நீண்ட தூர விரைவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின் றன.

  நடைமேடைகளில் முக்கியஇடங்களை தேர்வு செய்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன.

  பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் குறித்து தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இன்று 1,300 சிறப்பு பேருந்து
  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். 3, 4 தேதிகளில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.

  சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து 3-ம் தேதி (இன்று) 1,300 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,575 பேருந்துகளும், 4-ம் தேதி (நாளை) 1,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,817 பேருந்துகளும் இயக்கப்படும்.

  தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 233 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.5 கோடியே 81 லட்சத்து 13 ஆயிரம்  வருவாய் கிடைத்துள்ளது.

  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

  ரயில்களில் கூட்டம்!

  சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம்  ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன் 5-க்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடும் நெரிசல் இருந்ததோடு, படிகள் வரை நின்றபடி மக்கள் பயணம் செய்தனர்.

  இதுகுறித்து கேட்டபோது ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

  அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தாம்பரத்தில் இருந்து அதிகஅளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், வழக்கத்தைவிட அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 5-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டன.
  தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூருக்கு 3, 5 தேதிகளில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

  இவ்வாறு இரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This