தமிழகத்தில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளுக்கு சாட்லைட் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடைய தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் 1,500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும்15 படகுகள்கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு 80குழுக்களாக உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவொன்றுக்கும் ஒருஅதிநவீன விலைஉயர்ந்த தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட விருக்கிறது.
ரூ1 கொடியே 68 லட்சம் செலவில் 160 சாட்டிலைட்தோலை தொடர்பு தொலைபேசிகள் வழங்கப்படவுள்ளது.இதன் மூலம் ஒவொரு குழுவும் தலா மூன்று நவீன மெசேஜ் ரிசீவ்ர்களை பெற உள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பும் பருவகால மாற்றங்கள் போன்ற அவசரகால தகவல்கள் , இயற்கைபேரிடர் தகவகளை அத்தகைய ரிசீவ்ர்கள் மூலம் பெற்று தங்களுடைய குழுவில் உள்ள மாற்றுபடகுகளுக்கு வி.எச்.எப் கருவி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை திருத்தசட்டம் 2016 ன்படி ஒவொரு மீன்பிடி விசைப்படகும் கண்காணிப்பு மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
ஜி . பி .எஸ் ,வி . எச் .எப் ,எச் . எப் அல்லது வேறு வகையான கம்பியில்லா தோலைதொடர்பு கருவி, மீன்பிடி படகின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் கருவி போன்றவற்றின் மூலம் கடற்கரையுடன் தொடர்பில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக பேரிடர் அபாயகளங்களில் இதுமிகவும் அவசியமாகிறது .