தென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு

Forums Communities Fishermen தென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15016
  Kalyanaraman M
  Keymaster

  தென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு வருகின்ற நவம்பர்10, 11 தேதிகளில் கேரளா மாநிலம் கொச்சினில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்து கேரளா மாநில மீன்வளத்துறை அமைச்சர் திருமதி மெர்சிகுட்டி அம்மா கூறியதாவது:

  தென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு வருகின் றநவம்பர்10, 11ந் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு கொச்சின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கேரளா அரசு மீன் வளத்துறை, மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.  மீன்வளத்தை பாதுகாப்பதில் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவித்து தொடச்சியாக அண்டை மாநிலங்களுடன் இணைந்து கடல்வளத்தை பாதுகாப்பது குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  கேரள மாநில கடல் மீன் பிடிகட்டுப்பாடு சட்டம்   2017    கொண்டுவரப்பட்டதை அடுத்து மீன்வலைகளின் கண்அளவுகளை கட்டுப்படுத்தியது, மீன்குஞ்சுகளைபிடிக்காமல் தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்படும்

  இது போன்ற நடவடிக்கைகளில் அனைத்து அண்டை மாநிலங்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பலன் கிடைக்க முடியும். இந்த மாநாட்டின் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தின் போது தேசிய மீன்வள கொள்கை,  கடல்வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைகளை தடை செய்தல், மீன்குஞ்சுகள் பிடிக்கப்படுவதை தடை செய்தல்,  மீன்பிடி படகுகளின் அளவை கட்டுப்படுத்துதல் தாமாகவே படகுகளை அடையாளம் அறிந்து கொள்வதற்கான கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டப்படுவதைதடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அனைத்து தென்மாநிலங்களிலும் ஒருங்கிணைந்து எடுப்பது குறித்து விவாதிக்கப்படும்.

  இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உரியமுன்னுரிமை அளித்து இதுகுறித்த ஒருமித்த கொள்கை முடிவுஎடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும்.

  இந்த தென்மாநில மாநாட்டின் ஏற்பாடுகளை கேரள அரசு மீன்வளத்துறை இயக்குனர், எஸ். வெங்கடேஷ் பதி மத்திய மீன்வள தொழில் நுட்ப நிறுவன இயக்குனர் சி. என். ரவிசங்கர் உள்பட உயர் அதிகாரிகள் செய்துவருகின்றனர்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This