14 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைபிடிப்பு

Forums Communities Fishermen 14 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைபிடிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15014
  Kalyanaraman M
  Keymaster

  கடந்த 2 நாட்களில் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன   .

  தமிழகத்தின் நாகைமாவட்டத்தில் இருந்து நேற்றும்  ,இன்றும் கடலில் மீன்பிடிக்கச்சென்ற 2 மீன்பிடிபடகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் வளைத்து பிடிக்கப்பட்டனர்   .

  கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களும் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டு காங்கேசன் துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் . அங்கு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்  .

  2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன  .

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This