அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – முதல்வர்

Forums Inmathi News அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – முதல்வர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14897
  Kalyanaraman M
  Keymaster

  அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை செயல்படுத்த விரைவில், ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் மீனவர்களின் பிரச்சனையை எடுத்து வைப்பதாக கூறியுள்ளார். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு மூலம் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாகவும், செல்லும் இடமெல்லாம் அரசுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

  முன்னதாக கோவை ஆத்துப்பாலம் தொடங்கி உக்கடம் வரை அமையவுள்ள உயர்மட்ட பாலப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேரூர் புறவழிச்சாலை ஓரத்தில் உள்ள பெரிய குளத்தின் ஏரியை புனரமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார். வடவள்ளியில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வுகளின் போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This