அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்- முதல்வர், துணை முதல்வர் அறிக்கை:
தவறான வழிநடத்தல், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்.
பிரிந்து சென்றவர்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பினை யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
சிறு சிறு மனக்கசப்புகள் காரணமாக மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையுங்கள்.
கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட வேண்டும்.
நீரடித்து நீர் விலகுவது இல்லை என்ற பழமொழியை குறிப்பிட்டு முதல்வர், துணை முதல்வர் அறிக்கை.
மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெ ஆகியோர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையவேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை.