பதிவு பெறாத ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

Forums Communities Fishermen பதிவு பெறாத ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14892
  Kalyanaraman M
  Keymaster

  முறையான   பதிவு   பெறாத   ஆழ்கடல்   மீன்பிடிப்பு   படகுகளை   கடலில்   மீன்பிடிக்க   அனுமதிக்க   கூடாது   என்றும்   உரிய   நடவடிக்கை   எடுக்க   வேண்டும்   என்றும்   சென்னை   உயர்நீதிமன்ற  மதுரை   கிளை   தமிழக   அரசுக்கு   உத்தரவு   பிறப்பித்துள்ளது  .

  சென்னை   உயர்நீதிமன்றத்தின்    மதுரை    பிரிவின்    நீதியரசர்கள்   எம் .எம்  சுந்தரேஷ்   மற்றும்    என் .  சதீஷ்  குமார்   அமர்வு    பதிவு செய்யப்படாத   மீன்பிடி   படகுகள்  ஆழ்கடலில்   மீன்பிடிப்பது   தொடர்பான   வழக்கை   விசாரித்து   வந்தனர்   .

  ஆழ்கடல்  மீன்பிடிப்புக்கு   செல்லும்   முன்   வர்த்தக   கப்பல்   சட்டம்   1958 ன்   435  பிரிவின்  “ஜே ”  “கே ”  உட்பிரிவின்படி    உரிய  மாநில   அரசின்  பதிவு பெற்றிருக்க   வேண்டும்   என்றும்   அவ்வாறு  பதிவு  செய்யப்படாத   இயந்திரமயமாக்கப்பட்ட   மீன்பிடி   படகுகளை   ஆழ்கடல்   மீன்பிடிப்பில்   அனுமதிக்க  கூடாது  என்று   நீதியரசர்கள்    நேற்று   உத்தரவு   பிறப்பித்தனர்   .

  இது   தொடர்பாக     உரிய    நடவடிக்கையை   தமிழக   அரசு   எடுக்க  வேண்டும்   என்றும்    நீதிமன்றம்    தமது    உத்தரவில்    தெரிவித்துள்ளது .

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This