கிழக்கு கடற்கரையில் உள்ள தென்மாநில மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது .
ஆந்திர பிரதேசம் , தமிழ்நாடு , புதுச்சேரி ஆகிய கிழக்கு கடற்கரை தென்மாநில மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் புதுச்சேரி மாநில மீன்வளத்துறை செயலாளர் பி . பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது .
ஐதராபாதில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு கழக தலைமை நிர்வாக இயக்குனர் ரத்தினவேல் , ஆந்திர மாநில மீன்வளத்துறை துணை இயக்குனர் பி . தனஞ்செய ராவ் . தமிழ்நாடு மீன்வளத்துறை இணை இயக்குனர் திருமதி ரீனா செல்வி , புதுச்சேரி மாநில இயக்குனர் ஆர் . முனுசாமி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர் .
இழுவலையுடன் கூடிய விசைப்படகுகளை மாற்றி கூடுதலான மதிப்புள்ள மீன்களை பிடிக்கக்கூடிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றம் செய்யும் மத்திய அரசின் 50 % மணியத்துடனான ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது .
மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் கடந்த 2016 – 17 . மற்றும் 2017 – 18 ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்ட நிலவரம் குறித்தும் , அரசின் நிதி உதவிகள் வங்கி மூலம் நேரடியாக வழங்கப்படுவதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .