புதுவையில் கிழக்கு கடற்கரை தென் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டம்

Forums Inmathi News புதுவையில் கிழக்கு கடற்கரை தென் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டம்

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Kalyanaraman M 4 months, 3 weeks ago.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14891

    Kalyanaraman M
    Keymaster

    கிழக்கு   கடற்கரையில்   உள்ள   தென்மாநில   மீன்வளத்துறை   உயர்   அதிகாரிகள்    கூட்டம்    புதுச்சேரியில்    நடைபெற்றது  .

    ஆந்திர  பிரதேசம்  ,  தமிழ்நாடு   ,  புதுச்சேரி   ஆகிய  கிழக்கு  கடற்கரை   தென்மாநில   மீன்வளத்துறை   உயர்   அதிகாரிகள்  கூட்டம்   புதுச்சேரி   மாநில   மீன்வளத்துறை   செயலாளர்  பி . பார்த்திபன்  தலைமையில்   நடைபெற்றது  .

    ஐதராபாதில்   உள்ள  தேசிய  மீன்வள  மேம்பாட்டு   கழக   தலைமை   நிர்வாக   இயக்குனர்   ரத்தினவேல்   , ஆந்திர  மாநில   மீன்வளத்துறை   துணை   இயக்குனர்   பி  .  தனஞ்செய  ராவ்   . தமிழ்நாடு   மீன்வளத்துறை   இணை  இயக்குனர்  திருமதி   ரீனா  செல்வி  ,  புதுச்சேரி  மாநில  இயக்குனர்   ஆர்  .  முனுசாமி  உள்பட   அதிகாரிகள்  பங்கேற்றனர்  .

    இழுவலையுடன்    கூடிய  விசைப்படகுகளை   மாற்றி   கூடுதலான   மதிப்புள்ள     மீன்களை   பிடிக்கக்கூடிய   ஆழ்கடல்   மீன்பிடி   படகுகளாக   மாற்றம்  செய்யும்   மத்திய  அரசின்   50 %  மணியத்துடனான  ஊக்குவிப்பு   திட்டம்   உள்ளிட்ட   மத்திய  அரசின்   திட்டங்கள்  குறித்து  இக்கூட்டத்தில்   விவாதிக்கப்பட்டது   .

    மத்திய   அரசின்   நீலப்புரட்சி   திட்டத்தின்   கீழ்   கடந்த   2016  – 17 .   மற்றும்   2017 – 18 ம் ஆண்டில்   நிறைவேற்றப்பட்ட   திட்ட    நிலவரம்  குறித்தும் , அரசின்   நிதி   உதவிகள்     வங்கி   மூலம்   நேரடியாக   வழங்கப்படுவதில்   உள்ள   பிரச்சனைகள்    பற்றியும்    ஆய்வு   மேற்கொள்ளப்பட்டது   .

     

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This