ஸ்டெர்லைட் விவகாரம்: போலீஸாரிடம் வைகோ வாக்குவாதம்

Forums Inmathi News ஸ்டெர்லைட் விவகாரம்: போலீஸாரிடம் வைகோ வாக்குவாதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14877
    Kalyanaraman M
    Keymaster

    ஸ்டர்லைட் ஆலையின் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாகனத்தை காவல் துறையினர் பசுமை தீர்ப்பாய வளாகத்தில் அனுமதிக்காததால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் வழக்கை முன்னிட்டு அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கியமானவர்களின் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

    இன்று பசுமைத் தீர்ப்பாய வளாகத்துக்குள் வைகோவின் காரை அனுமதித்த போலீசார், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஆரியமாசுந்தரத்தின் காரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து மூத்த வழக்கறிஞர் அவமதிக்கப்படுவதாகக் கூறி வைகோ காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஆரியமா சுந்தரத்தின் வாகனத்தை காவல்துறையினர் அனுமதித்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This