இரு தொகுதிகளில் ஜனவரிக்குள் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்

Forums Inmathi News இரு தொகுதிகளில் ஜனவரிக்குள் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14855
  Kalyanaraman M
  Keymaster

  திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ.க்களின் தகுதிநீக்கத்தை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில், மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்குச் செல்ல 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

  இந்த அவகாசத்திற்குப் பிறகு, 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், ஜனவரிக்கு முன்னதாக திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுடன் இணைத்து நடத்தப்படலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This