திருநாவுக்கரசரின் கையைத் தொட்டு பேசிய காவல் அதிகாரியுடன் காங்கிரசார் வாக்குவாதம்

Forums Inmathi News திருநாவுக்கரசரின் கையைத் தொட்டு பேசிய காவல் அதிகாரியுடன் காங்கிரசார் வாக்குவாதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14853
    Kalyanaraman M
    Keymaster

    சிபிஐ இயக்குநரின் அதிகார பறிப்புக்கு எதிராக தமிழக காங்கிரசார் சென்னை சாஸ்திரி பவன் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் முடிவுக்கு வந்தபோது, கட்சியினர் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

    கைதானவர்களை விடுவிக்குமாறு திருவல்லிக்கேணி உதவி ஆணையர் செல்வநாகரத்தினத்திடம் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் முறையிட்டார். ஆனால், விடுவிக்க முடியாதென அவர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திருநாவுக்கரசரின் கையை உதவி ஆணையர் செல்வநாகரத்தினம் தொட்டுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் ஆத்திரமுற்று கண்டன முழக்கங்களை எழுப்பி, வாக்குவாதம் செய்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This