பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

Forums Communities Farmers பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Inmathi Staff 8 months, 3 weeks ago.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14852

    Inmathi Staff
    Moderator

    வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது.
    துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது.
    மிளகாயில் ஏற்படும் ஆந்தராக்னோஸ் நோய், பழ அழுகல் மற்றும் நுனிகருகல் நோய்களுக்கு சீமைக்கருவேல் இலைச்சாறு 10 சதம் நாற்று நடப்பட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
    வேப்ப இலைச்சாறு 10 சதம் கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது.
    சாணத்தை கரைத்து வடிகட்டப்பட்ட நீர் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால் உளுந்து பயிரில் சாம்பல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    கரும்பு பயிரில் கரணை அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ 40, 60 மற்றும் 80 நாட்களில் இட நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This