ஆற்றில் மீன் பிடித்த போது மீனவரை அடித்து கொன்ற புலி

Forums Communities Fishermen ஆற்றில் மீன் பிடித்த போது மீனவரை அடித்து கொன்ற புலி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14846
  Kalyanaraman M
  Keymaster

  காட்டில்    ஆற்றில்   மீன்   பிடித்து   கொண்டிருந்த    மீனவரை   புலி  ஒன்று  அடித்து   கொன்ற   சம்பவம்    அப்பகுதி   மீனவர்களிடையே    பெரும்  கொந்தளிப்பை   ஏற்படுத்தியுள்ளது.

  மேற்கு   வங்க   மாநிலம்    24   பரகனா   மாவட்டப்பகுதிகளில்   இந்தியா  –  பங்களாதேஷ்    எல்லை  பகுதிக்குட்பட்ட   பல   நூறு  கிலோ மீட்டர்   பரப்பளவில்   இரு  நாட்டு   பகுதிகளில்   உள்ள    சுந்தரவனக்காடுகளில்   பல   நூறு   கிளைகளாக     பரந்து    விரிந்து   ஓடும்   கங்கை    நதி    வங்காள    விரிகுடாவில்     கலக்கிறது.

  இந்த   சுந்தரவனக்காடு   பகுதிகளில்   ஆற்றில்   கரையை   ஒட்டி   வாழும்   ஆயிரக்கணக்கான     மேற்கு   வங்காள    மீனவர்கள்     ஆறுகளில்    நாட்டு    படகில்     இருவர்    அல்லது     ஒருவர்    தனியாக     சென்று     மீன் பிடிப்பதும்    தேன்   சேகரிப்பதும்    வழக்கம்.

  வனத்தின்    உள்   பகுதிகளிலும்   ஓடும்   கிளை   ஆறுகளில்    மீன்  பிடிக்கும்போதும்    அல்லது   ஆற்றங்கரை    ஓரங்களில்    அவர்கள்  குடும்பத்துடன்     வசிக்கும்   குடிசை   பகுதிக்குள்    புகுந்தும்    புலிகள், மீனவர்களை    அவ்வப்போது    வேட்டையாடுவதும்    உண்டு.

  சுந்தரவனக்காடுகளின்  கொசாபா   பகுதியில்    பல்லி  சத்யநாராயண்பூர்   என்ற   இடத்தில்    மதுமண்டல்    (வயது    42)   என்பவர்   புதன்கிழமை    அதிகாலை    சிறிய   நாட்டு   படகில்    ஆற்றின்    கரைக்கு   அருகே    நண்டு  பிடித்துக் கொண்டிருந்தார்.

  அப்போது  பெரிய  பெங்கால்  புலி  ஒன்று   மறைந்திருந்து    அவர்மீது   தாக்குதல்    நடத்தியது.

  அருகாமையில்   மீன்   பிடித்துக்கொண்டிருந்த    மீனவர்கள்    புலியை  அடித்து  துரத்தி  விட்டு     மீனவரை    கொசாபா   மருத்துவமனைக்கு    தூக்கிச்    சென்றனர்.    அவர்   ஏற்கனவே    இறந்துவிட்டதாக    மருத்துவர்கள்   அறிவித்தனர்.

  சுந்தரவனக்காடுகளில்   வசிக்கும்    பழங்குடியின    மீனவ   மக்கள்   ஒரு பக்கம்   புலிகளின்    தாக்குதலுக்கும்    மறுபக்கம்    வனத்துறையினரின்   தாக்குதலுக்கும்   இடையே   வாழ்க்கையை   நகர்த்திக்கொண்டிருப்பதாக    அப்பகுதி  மக்கள்    வேதனையுடன்     தெரிவிக்கின்றனர்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This