மீன்குஞ்சுகளை பிடித்த 600 மீனவர்களுக்கு ஜெயில் தமிழ்நாட்டில் சாத்தியமா?

Forums Communities Fishermen மீன்குஞ்சுகளை பிடித்த 600 மீனவர்களுக்கு ஜெயில் தமிழ்நாட்டில் சாத்தியமா?

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Kalyanaraman M 1 year ago.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14844

  Kalyanaraman M
  Keymaster

  மீன்பிடி   தடை   காலத்தில்   தடையை  மீறி  மீன்குஞ்சுகளை  பிடித்ததாக   கடந்த   15   நாட்களில்   மட்டும்   அண்டை  நாடான  பங்களாதேஷ்   நாட்டில்    600  மீனவர்கள்   சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.   ஜெயில்   தண்டனையுடன்    அபராதமும்  விதிக்கப்பட்டுள்ளது.

  இது   போன்ற  நடவடிக்கைகள்    அண்டை   மாநிலமான    கேரளாவிலும்   எடுக்கப்படுகிறது.   தமிழ்நாட்டில்   இது  சாத்தியமா  என்று  கேள்வி  எழுந்துள்ளது.

  பங்களாதேஷ்   நாட்டில்    கடந்த   அக்டோபர்    7  ஆம்   தேதி    முதல்  22   நாட்கள்   மீன்பிடி  தடை  காலம்   அமல்படுத்தப்பட்டுள்ளது.       இனவிருத்தி   காலம்   என்பதால்   “ஐலிஷ்”  மீன்களை   பிடிக்க   தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  தடைமீறப்படுகிறதா,   மீன்   குஞ்சுகள்    பிடிக்கப்படுகிறதா,   என்பதை   கண்காணிக்க    கடந்த    15  நாட்டகளில்   1213   ரெய்டுகள்    நடத்தப்பட்டன.  மொபைல்   கோர்ட்டில்    561  வழக்குகள்    விசாரிக்கப்பட்டு   தீர்ப்பு  வழங்கப்பட்டன.

  இதில்   மீன்பிடி   தடை   சட்டத்தை    மீறி    மீன்  குஞ்சுகளை பிடித்ததாக   600 மீனவர்களுக்கு   சிறை  தண்டனையும்,  பங்களாதேஷ்  மதிப்பில்   8.3  லட்சம்   டகா   அபராதமும்   வசூலிக்கப்பட்டது.   மேலும்   20 லட்சம்   மீட்டர்   வலைகளும்    5   ஆயிரம்   கிலோ   மீன்களும்   பறிமுதல்   செய்யப்பட்டன.

  சமீப  காலங்களில்  கேரளா  அரசின்   மீன்வளத்துறை    தீவிர   நடவடிக்கை   எடுத்து    மீன்   குஞ்சுகளை   பிடிக்கும்   மீனவர்களுக்கு    பெரும்   தொகை    அபராதம்   விதித்து    வருகின்றனர்.

  இது   போன்ற   தமிழகம்    புதுச்சேரியிலும்    தீவிர   நடவடிக்கை  எடுக்க   வேண்டும்   என்று    மீனவ   சமுதாய   தலைவர்கள்    கோரிக்கை  விடுத்து   வருகின்றனர்.   தீவிர   நடவடிக்கை   எடுத்தால்    மீன்வளம்    நீண்ட  காலத்துக்கு   பாதுகாக்கப்பட்டு   மீனவர்களின்  வாழ்வாதாரம்  நீடிக்கும்  என்று    அவர்   தெரிவிக்கின்றனர்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This