சுற்றுலா பயணிகளை கவர கடல் உணவு அவசியம் தேவை

Forums Communities Fishermen சுற்றுலா பயணிகளை கவர கடல் உணவு அவசியம் தேவை

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Kalyanaraman M 10 months, 3 weeks ago.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14842

  Kalyanaraman M
  Keymaster

  உலகம்   முழுவதும்    பெரும்பாலான   சுற்றுலா   பயணிகள்    சமுத்திரம்,   கடல்   மற்றும்   நீர்   நிலை   சார்ந்த   பகுதிகளுக்கே    செல்வ விரும்புவதும்    கடல்   உணவை   தேடி   செல்வதும்    சுற்றுலா  பயண  ஏற்பாட்டாளர்கள்    மாநாட்டின்   மூலம்   தெரியவந்துள்ளது.

  இந்திய   கடலோர   மாநிலங்களின்   பெரும்  கடற்கரை  மாநகரங்களில்    ஒன்றாக   விளங்குவது    விசாகப்பட்டினம்.

  இந்தியாவின்   கப்பல்   படை   தளத்துடன்    கூடிய   மிகப்பெரிய   துறைமுக   நகராக    விளங்கும்    விசாகப்பட்டினம்   ஆழ்கடல்    மீன்பிடிப்பு  படகுகள்,   மீன்  பிடி   மினி   கப்பல்களை     (Deep Sea Trawler)  கையாளும்  மீன்  பிடி  துறைமுகமாகவும்    விளங்குகிறது.

  மிக   நீளமான   மணற்பரப்புடன்   கூடிய    அழகிய   கடற்கரையை     கொண்ட    நகரமாதலால்    அருகாமையில்   உள்ள   தமிழ்நாடு,  ஒடிசா,  மேற்கு  வங்காளம்   போன்ற    மாநிலங்களிலிருந்தும்    பிற   மாநிலங்களிலிருந்தும்    ஏராளமான   சுற்றுலா   பயணிகள்    படையெடுக்கின்றனர்.

  கடலில்   கிடைக்கும்   மீன்கள்   உள்ளிட்ட    பிற   வகை   கடல்  உணவை    ருசிக்கலாம்   என்று    பயணிகள்   பெரும்   ஏமாற்றம்   அடைவதாக   தற்போதைய   தகவல்கள்   தெரிவிக்கின்றன.

  விசாகப்பட்டினத்தில்  இருந்து   கடலுக்கு  மீன்  பிடிக்கச்   செல்லும்   மீனவர்கள்   வகை   வகையான    மீன்களை   ஏராளமாக   பிடித்து   வந்தாலும்   அவை   வெளிநாடுகளுக்கும் , இந்தியாவின்  பல   மாநிலங்களுக்கும்   ஏற்றுமதி  ஆகி  விடுவதால்    மிக   குறைந்த   அளவு   மீன்  மட்டுமே   விசாகப்பட்டினம்   ஓட்டல்களில்    கிடைப்பதாக    வருத்தப்படுகின்றனர்   சுற்றுலா   பயணிகள்.

  ஒரு   நாளைக்கு   60 டன்  கடல்  உணவு   விசாகபட்டினத்தின்  தேவைக்கு   கிடைத்தாலும்,    சுவையான   வஞ்சரம்,  வௌவால்,   டைகர்  எறால்   போன்றவை  கிடைப்பதில்லை   என்கிறார்கள்  சுற்றுலா   பயணிகள்.

  அகில   இந்திய    சுற்றுலா    பயண    ஏற்பாட்டாளர்கள்    சங்க    34 வது   மாநாடு   விசாகப்பட்டினத்தில்    நடைபெற்றது.

  இந்த   மாநாட்டில்   பங்கேற்ற   உறுப்பினர்கள்   கருத்து   தெரிவிக்கையில்    கடற்கரை   நகரமென்பதால்    வகை  வகையான   மீன்  உணவுகளை   எதிர்பார்த்து    வந்தவர்களுக்கு    ஏமாற்றமே    மிஞ்சியது   என்று  தெரிவித்தனர்.

  அகில  இந்திய    சுற்றுலா   பயண    ஆப்பரேட்டர்கள்   சங்க   தலைவர்   திரு.  கே.  ரங்கா     ரெட்டி    இது  குறித்து  கூறுகையில்,  “சுற்றுலாவில்    உணவு   மிக   முக்கியமான   பங்குவகிக்கிறது.   சிறந்த   வகையான   சுவையான   கடல்   உணவு    அனைவருடைய   தேவையாக   உள்ளது”  என்று  கூறினார்.

  மேற்கண்ட   அனுபவத்தை   உணர்ந்து   தமிழக, புதுச்சேரி மாநில   கடற்கரை  சுற்றுலா   நகரங்களில்   பிற  மாநில  சுற்றுலா  பயணிகளின்   எதிர்பார்ப்பை    பூர்த்தி   செய்ய   வேண்டியது   முக்கியமானது    என்று   தமிழக  சுற்றுலா   பயண   ஏற்பாட்டாளர்    ஒருவர்    கருத்து   தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This