தேவர் குரு பூஜையில் பங்கேற்க வேண்டியுள்ளதால் 3 நாட்கள் காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதிலிருந்து நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய வழக்கில் கருணாஸ் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஜாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டு பின் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வெளியே வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு கையெழுத்துயிடுவதில் இருந்து தளர்வு வேண்டும் என அனுமதி கோரியிருந்தார். அந்த வழக்குக்காக இன்று காலை பத்தரை மணிக்கு கருணாஸ் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.