கோவா மாநிலத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களில் பார்மலின் இரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக உலகத்தரம் வாய்ந்த அதிநவீன பரிசோதனை கூடம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலோடு இரண்டர கலந்தது மீன் உணவாகும்
இதனால் அந்த மாநில மக்களின் கடல் உணவு தேவைகளுக்காக பிற மாநிலங்களிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் வர்த்தகம் , தொழில் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு , கோவா தலைநகரில் செய்தியாளர்களை சந்தித்த போது ” மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு கவுன்சில் மற்றும் ஏற்றுமதி பரிசோதனை ஏஜென்சி இணைந்து உலகத்தரம் வாய்ந்த பரிசோதனை நிலையம் ஒன்றை கோவாவில் நிறுவ உள்ளோம் ” என்றுகூறினார் .
இந்த அதிநவீன பரிசோதனைக் கூடத்துடன் மொபைல் பரிசோதனைக் கூடம் இணைந்ததாகவும் இருக்கும் . புகார் தெரிவிக்கப்படும் போது அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து தரக்கட்டுப்பாடு கண்டறியப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் .
கோவா மாநில அரசும் , மத்திய அரசும் இனைந்து மீன் உட்பட அனைத்து பொருட்களும் தரக்கட்டுப்பாட்டுடன் மக்களுக்கு கிடைக்க உறுதி பூண்டுள்ளோம் . மீன்களின் இரசாயன கலப்படம் உள்பட தரம் சார்ந்த புகார்கள் குறித்து ஆன்லைனில் புகார் பெறவும் அவை உடனுக்குடன் பரிசோதிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார் .