மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவப் பெண்களிடம் அட்டூழியம்

Forums Communities Fishermen மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவப் பெண்களிடம் அட்டூழியம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14800
  Kalyanaraman M
  Keymaster

  மீன்  பிடித்துக்கொண்டிருந்த  மீனவப்பெண்ணையும்,  அவருடைய  கணவரையும்   வெகுதூரம்  இழுத்து  சென்று   அட்டூழியத்தில்  ஈடுபட்டுள்ள  சம்பவம்   மீனவர்களிடையே   ஆவேசத்தை   உருவாக்கியுள்ளது.

  மேட்டூர்  அணையில்  மீன்வளத்துறை  உரிமம்  பெற்று   2000  பேர்   மீன்  பிடித்து  வருகின்றனர்.    அணையில்   சிறு   ஆயவலை   வீசி   மீன் பிடிக்க  தடை   விதிக்க   பட்டுள்ளது.

  ஒரு  சில  மீனவர்கள்   தடையை  மீறி  அத்தகைய  வலையை  பயன்படுத்துவதாக   புகார்  வந்ததை  அடுத்து  மீன்வளத்துறை  அதிகாரிகள்  அவ்வப்போது  அணைக்குள்   விசைப்படகில்  சென்று   மீனவர்களை  பிடித்து  நடவடிக்கை   எடுத்து  வருகின்றனர்.   மீன்  குஞ்சுகளை  பிடிக்கும்  மீனவர்களின்  வலைகள்  மற்றும்  பரிசில்களை  பறிமுதல் செய்து   வருகின்றனர்.

  இது  தொடர்பாக  மீன்வளத்துறையினர்   மீனவர்கள்  இடையே  அவ்வப்போது   பிரச்சினை  ஏற்பட்டு   பனிப்போர்  நீடித்து  வருகிறது.

  கொளத்துர்,  புது   வேலமங்கலம்    மீனவ   தம்பதி  சின்னக்கண்ணன்  (38) அம்பிகா  (30) இவர்கள்  பாலவாடி  நீர்ப்பரப்பு  பகுதியில்   தங்கள்  பரிசலில்    நேற்று   மீன்  பிடித்துக்கொண்டிருந்தனர்.

  அப்போது  அந்த  பகுதியில்  விசை படகில்  ரோந்து  வந்த  மீன்வளத்துறை   அதிகாரிகளுக்கும்   தம்பதியினருக்கும்   இடையே   மோதல்  ஏற்பட்டுள்ளது.   அதில்  காயமடைந்த   கணவன் – மனைவி  இருவரும்   மேட்டூர்   அரசு   மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டனர்.

  சம்பவம்  குறித்து  சின்னக்கண்ணன்  கூறியதாவது:

  மனைவியும், நானும் பரிசலில்  மீன்  பிடித்துக்கொண்டிருந்தோம்  விசைப்படகில்  வேகமாக  வந்த  மீனவளத்துறையினர்   பரிசல்  மீது மோதியதால்   நாங்கள்   நீரில்   குதித்து   விட்டோம்.   பரிசல்  மூழ்கிவிட்டது.  இதனால்   நீந்தி    விசைப்படகை    பிடித்து   தொங்கினோம்.

  அப்போது  மீன்வளத்துறையினர்   விசைப்படகை   வெகு  தூரம்  வேகமாக   ஓட்டினர்   தொங்கிக்கொண்டிருந்த  எங்களை  படகில்   ஏற்றாமல்   நீண்ட   தூரம்    இழுத்து   சென்ற   பின்னர்    கரைக்கு   அருகில்  படகில்   ஏற்றினர்.  மனைவிக்கு   கையில்   காயம்   ஏற்பட்டதால்    மயக்கம்   அடைந்து   விட்டார் . எங்களை   மருத்துவமனைக்கு   அனுப்பி   வைத்தனர்.

  இவ்வாறு   அவர்  கூறினார்.  இச்சம்பவத்தால்   மீன்வளத்துறை  அதிகாரிகள்  மற்றும்  மேட்டூர்  அணை  மீனவர்களுக்கிடையே   மோதல்  போக்கு   உருவாகியுள்ளது.   மீனவர்கள்   ஆவேசம்   அடைந்துள்ளனர்.

  மோதல்  போக்கை  தணிக்க   அரசு  உரிய  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்   என்று   மீனவ   சமுதாய    தலைவர்கள்   எதிர்பார்க்கின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This