எல்லை தாண்டியதாக 16 இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தானில் சிறை

Forums Communities Fishermen எல்லை தாண்டியதாக 16 இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தானில் சிறை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14798
    Kalyanaraman M
    Keymaster

    எல்லை  தாண்டி  மீன்  பிடித்ததாக  கூறி  இந்திய  மீனவர்கள்   16 பேர்களை   நேற்று  பாகிஸ்தான்   கடல்  பாதுகாப்பு  படையினர்   கைது செய்து  பாகிஸ்தான்   சிறையில்   அடைத்தனர்.

    இந்தியாவின்  குஜராத்,   டையூடாமன்    மீனவர்களை    பாக்கிஸ்தான்   கடல்  பாதுகாப்பு  படையினர்   கைது   செய்வதும்  பாக்கிஸ்தான்    மீனவர்களை   இந்திய   கடலோர   காவல்   படையும்,  கடல்  படையும்  பிடித்து    கைது    செய்வதும்    அவ்வப்போது   நடந்து   வருகிறது.

    நேற்று  குஜராத்   மாநிலத்தில்   இருந்து  கடலில்  மீன்  பிடிக்க   3  படகுகளில்     சென்ற   16  மீனவர்களை   எல்லை   தாண்டி   வந்து  பாக்கிஸ்தான்     கடல்    பகுதியில்    மீன்    பிடித்ததாக    கூறி    பாகிஸ்தான்   கடல்   பாதுகாப்பு    படையினர்     கைது    செய்து   அழைத்துச்    சென்று    சிறையில்    அடைத்துள்ளனர்.

    3  படகுகளையும்    பறிமுதல்   செய்துள்ளனர்.

    கடந்த  வாரம்  புதன்  கிழமையன்று  பாகிஸ்தான்   கடல்   எல்லைக்குள்  நுழைந்ததாக   கூறி  குஜராத்  மீனவர்கள்   11  பேர்    ஒரு   படகுடன்   கைது  செய்யப்பட்டு    பாகிஸ்தான்   சிறையில்   அடைக்கப்பட்ட்டனர்.

    இந்தியா – பாகிஸ்தான்    குறுகிய    கடல்   எல்லையில்    எந்த  வித தொழில்  நுட்ப   அறிவும்,  அனுபவமும்    இல்லாத,  படிப்பறிவில்லாத   அப்பாவி  மீனவர்கள்  பாகிஸ்தான்  சிறைகளில்  அடைக்கப்படுவது   வேதனையான    விஷயம்   என்கிறார்    குஜராத்   மாநில   மீனவ   சமுதாய  தலைவர்    ஒருவர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This